Beauty tips Pink lips : பிங்க் நிற உதடு வேணுமா; இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!!
சிலரது உதடுகள் இயற்கையிலேயே பிங்க் நிறத்தில் இருக்கும். சிலரோ லிப்ஸ்டிக் போட்டு இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்றுவார்கள். முக அழகிற்கு கூடுதல் கவர்ச்சி தரக்கூடிய உதடுகளை எப்படி பராமரிப்பது. இயற்கையாக இளஞ்சிவப்பு நிற உதடுக்கு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
பிங்க் உதடுகள்
ஒருவருடைய உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அது ஆரோக்கியத்தின் அறிகுறி. சிலரது உதடுகள் கறுப்பாக இருக்கும். உங்கள் உதடுகளையும் இயற்கையான முறையில் ஒரே வாரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற வேண்டும் எனில் பயனுள்ள சில சிம்பிள் டிப்ஸ்களை ஃபாலோ செய்ய வேண்டும்.
உதடுகளுக்கு மசாஜ்:
இரவு தூங்கும் போது தேங்காய் எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து விட்டு தூங்கி விடவும். தேனுடன் சர்க்கரை கலந்து உதடுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு செய்யும்போது உதடுகளுக்கு ரத்த ஓட்டம் நன்றாக செல்லும். ஒரு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து பிறகு கழுவி விட வேண்டும்.
பீட்ரூட் சாறு:
பீட்ரூட்டை சாறு சிறிதளவு எடுத்து உதடுகளில் தேய்த்து ஒரு நிமிடம் மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சத்தான உணவுகள்
நம்முடைய உணவில் தக்காளி, மாதுளை பழம், தர்பூசணி, வால்நட், பாதாம் பருப்பு, பீட்ரூட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் முறையாக பின்பற்றும் போது சில மாதங்களிலேயே உங்கள் உதடு பிங்க் நிறமாக மாறிவிடும்.
வைட்டமின்கள்:
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உதட்டிற்கு தேவையான நீர்ச்சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. இந்த உணவுகளில் வைட்டமின்களும் மினரல்களும் அதிகளவு இருப்பதால், உங்கள் உதடுகளுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.
தண்ணீர் அவசியம்
உங்கள் உதடுகளுக்கு மட்டுமல்லமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நீர்ச்சத்து அவசியமாகும். தினமும் குறைந்தபட்சம் எட்டு க்ளாஸ் நீர் அருந்துங்கள். இதன் மூலம் உங்கள் உதடுகள் வறண்டு போகாது.
கறுப்பு உதடுகள்:
சிலரது உதடுகள் கறுப்பாக இருக்கிறதே என்று கண்ட கண்ட லிப்ஸ்டிக்குகளை வாங்கி பயன்படுத்தாதீர்கள். இதன்மூலமும் உதடுகள் கறுப்பாக வாய்ப்புள்ளது. தூக்கம் குறைந்தாலும் உதடுகள் கறுப்பாகும். குறைந்த்து தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குங்கள். இளஞ்சிவப்பு உதடுகளுக்கு மேலே சொன்ன சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.. உங்கள் உதடுகளைப் பார்த்தாலே முத்தமிடத்தோன்றும்.