MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Youtuber Irfan : பெண் குழந்தை பிறந்தது... அப்பா ஆன குஷியில் யூடியூபர் இர்பான் - குவியும் வாழ்த்து

Youtuber Irfan : பெண் குழந்தை பிறந்தது... அப்பா ஆன குஷியில் யூடியூபர் இர்பான் - குவியும் வாழ்த்து

புகழ்பெற்ற யூடியூபரும் குக் வித் கோமாளி பிரபலமுமான இர்பான் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 24 2024, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
irfan

irfan

இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் முகமது இர்பான். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை சுற்றி அங்குள்ள உணவுகளை சுவைத்து ரிவ்யூ கொடுக்கும் புட் விலாகராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இர்பான் இன்று தமிழ்நாட்டின் டாப் யூடியூபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு யூடியூபில் 30 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

24
youtuber Irfan

youtuber Irfan

இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. அவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆசிபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் மனைவி உடன் குக்கிங் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு தன் மனைவியையும் யூடியூபராக மாற்றினார் இர்பான். இதனிடையே தன்னுடைய மனைவி ஆசிபா கர்ப்பமாக இருக்கும் தகவலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார் இர்பான்.

இதையும் படியுங்கள்... மனசுல ரஜினினு நெனப்பு! போயஸ் கார்டன் வீடு பற்றி குட்டி ஸ்டோரி சொன்ன தனுஷை கும்மாங் குத்து குத்தும் நெட்டிசன்ஸ்

34
irfan blessed with a baby girl

irfan blessed with a baby girl

அதுவும் சாதாரணமாக அல்ல, துபாயில் விழா நடத்தி, அங்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதை அந்த விழாவில் அறிவிக்கவும் செய்தனர். இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால் துபாய்க்கு சென்று இந்த வேலையை செய்திருந்தார் இர்பான். அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார் இர்பான்.

44
irfan instagram post

irfan instagram post

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய இர்பான், அதில் தன்னுடைய சமையல் திறமையை காட்டி வருகிறார். இதுதவிர அவர் சினிமாவில் முதன்முறையாக நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி சினிமா, சின்னத்திரை என பிசியாக உள்ள இர்பானுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் விரலை பிடித்தவாரு எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் இர்பான். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... 51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved