விரிசல் ; திமுகவிற்கு பயம் காட்டும் கூட்டணி கட்சிகள்.! 2026 தேர்தலுக்கு பல்டி அடிக்க போவது யார்.?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுகவின் சில செயல்பாடுகள் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுகவால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கமுடியாமல் தவித்தது. இதற்கு முக்கிய காரணம் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகள் தனித் தனி அணியாக தேர்தலை எதிர்கொண்டது. இது மட்டுமில்லாமல் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய தலைமையும் காரணமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.
ஆனால் ஆட்சி அமைத்த ஒரு சில மாதங்களிளையே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதா காலமானார். இதன் பிறகு தான் அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியின் காரணமாக கட்சியே பல பல பிரிவுக்களாக பிரிந்தது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என ஒரு பக்கம், மறு பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் வாக்குகள் பிரிந்து எதிரணிக்கு வெற்றி எளிதாகி வருகிறது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்த கட்சியின் கூட்டணி பலத்தால் 38 தொகுதிகளை தட்டிப்பறித்த இந்த கூட்டணி 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்த கூட்டணியின் அசூர பலத்தால் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பறித்தது.
விஜய்யை பார்த்து அலறுகிறதா திமுக? அதிமுகவின் திகில் கணக்கு!!
ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 78 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்தநிலையில் இந்த கூட்டணிக்கு முன்னால் எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாமல் உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கோர்த்த இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழந்தது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக களம் இறங்கியுள்ளது. 200 தொகுதிகளில் திமுக போட்டி என்ற முழுக்கமும் எழுந்துள்ளது. இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
இதே போல விடுதலை சிறுத்தைகளும் 2026ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவிற்கு பல்டி அடிக்கலாமா என காத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திமுகவின் செயல்பாடு கூட்டணி கட்சிகளை அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. உதாரணமாக கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவும் திமுகவும் கை கோர்த்து சென்றதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை.
அதே நேரத்தில் பழனியில் முருகன் மாநாடு நடத்தியையும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ரசிக்கவில்லை. ஒரு அரசாங்கம் ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது என கருத்தை தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில் தான் திமுகவுடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வேறு கட்சிக்கு பல்டி அடிக்கும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதனை வைத்து தான் திமுகவின் மூத்த தலைவர் கேஎன் நேருவும் உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டமன்ற தேர்தலில் வருமா என்று சொன்னால், நிச்சயமாக அதுபோல் சுமூகமான சூழ்நிலை வராது என்பது எங்களுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும் போது சீமான், ராமதாஸ் ஒரு பக்கம் நம்மை விமர்சிக்கிறார். மற்றொரு பக்கம் விஜய் புதிதாக கட்சி தொடங்கவுள்ளார். பாஜக நமக்கு எதிராக உள்ளனர். எனவே எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் கடுமையாக வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்படி இருக்கும் பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் உள்ள சூழல் சுமூகமாக இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த கருத்து திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதை உணர்த்துவதை போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது
இத்தனை கட்சிகள் திமுகவிற்கு எதிர்ப்பாக உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளும் அதிமுக அல்லது விஜய் பக்கம் பல்டி அடிக்க காத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், படிப்பது ராமாயணம் இடிப்பது பிள்ளையார் கோவில் என்பது போல் திமுக செயல்படுகிறது. சனாதான மாநாடு நடத்திவிட்டு பாஜகவை திருப்தி படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்
இது திமுக கூட்டணிகளுக்கு இதை பிடிக்கவில்லை எனவே இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது தெரியும். போகப்போக தெரியும் திமுக பூவின் வாசம் இல்லை இந்த சேத்தின் வாசம் என கூறினார். 2026 நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.