தக்காளி விலை மீண்டும் குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை விவரம். இஞ்சி, மாங்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், புடலங்காய் விலை என்ன என்பதை அறிய படிக்கவும்.
தக்காளி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த பகுதிகள்?
Vegetables Price Today
இஞ்சி விலை நிலவரம்
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180 க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீன்ஸ் விலை என்ன.?
நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம், நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்.! முன்பதிவு தொடங்கியதா.?
முருங்கைக்காய் விலை என்ன.?
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.