Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த பகுதிகள்?
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மணலி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
Power Shutdown in Chennai
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
மணலி:
நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், பட சாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் கர்னல், இளந்தனூர், பொன்னேரி ஹை ரோடு, ராஜீவ் காந்தி நகர், எம்எம்டிஏ கட்டம்-I & II, துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனைச் சாவடி, ஏசிசி மெயின் ரோடு, மெட்டல் & இந்தோ டெக், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி. நகர், பெரியதோப்பு, சின்னமாத்தூர் சாலை, விஏஓ, புதுக்கோவில், சந்தானகிருஷ்ணன் சாலை, விமலாபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
Power Shutdown
அடையாறு:
காந்தி நகர் (பகுதி), கால்வாய் வங்கி சாலை, காந்தி நகர 2வது மெயின் ரோடு, 3வது கால்வாய் குறுக்கு சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.