MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாலியல் தொல்லை... பிரிந்து சென்ற 2வது கணவர் - மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகை தீபா

பாலியல் தொல்லை... பிரிந்து சென்ற 2வது கணவர் - மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகை தீபா

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா, தன்னுடையை இரண்டாவது கணவருடன் தன்னை சேர்த்துவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Deepa, ganesh babu

Deepa, ganesh babu

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து பிரிந்த தீபா, மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தபோது அதில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Serial Actress Deepa

Serial Actress Deepa

இதையடுத்து கணேஷ் பாபுவை காதலிக்க தொடங்கிய தீபா, அவரை கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டார். கணேஷ் பாபு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற விஜய் டிவி தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சினிமா மற்றும் சீரியல் திரைக்கதை வசனகர்த்தாவான ரமண கிரிவாசன் என்பவரின் சகோதரர் தான் இந்த கணேஷ் பாபு. தீபா உடன் சேர கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... டாப் நாயகிகளுக்கு செம போட்டி.. திடீரென கிளாமர் குயின் போல மாறிய பிரியா அட்லீ - ஹாட் புகைப்படங்கள் இதோ!

34
Deepa Babu

Deepa Babu

குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி தான் அவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் கணேஷ் பாபு. திருமணத்துக்கு பின்னர் தீபாவுடன் தனியாக வாழ்ந்து வந்த கணேஷ் பாபு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் கணவரை தன்னுடன் மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கணேஷ் பாபுவின் சகோதரர் ரமண கிரிவாசன் தனக்கு தொடர்ந்து மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். மேலும் தன்னுடைய கணவரின் குடும்பத்தார் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசுவதாகவும், இதனால் தான் தனக்கும் தனது கணவருக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

44
Deepa husband Ganesh Babu

Deepa husband Ganesh Babu

கணவருடன் பிரச்சனை இருந்தாலும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ள தீபா, தன்னை அவருடன் சேர்த்து வைக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி ஓராண்டுக்குள் நடிகை தீபா இரண்டாவது கணவரை பிரிந்துள்ள தகவல் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... புரட்சி தலைவரோடு 28 படங்கள்.. அதில் 16 படங்கள் சூப்பர் ஹிட் - யார் அந்த ஈடு இணையற்ற கதாநாயகி தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved