MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரம்மாண்ட வீடு கட்டி... குடும்பத்துடன் சிம்பிளாக கிரஹப்பிரவேசம் நடத்திய மதுரை முத்து - வைரலாகும் போட்டோஸ்

பிரம்மாண்ட வீடு கட்டி... குடும்பத்துடன் சிம்பிளாக கிரஹப்பிரவேசம் நடத்திய மதுரை முத்து - வைரலாகும் போட்டோஸ்

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி வரும் மதுரை முத்து, பிரம்மாண்ட வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 27 2024, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Madurai muthu

Madurai muthu

சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் கவலை மறந்து வயிறுவலிக்க சிரிக்க வைத்தவர்களை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. 

28
Madurai muthu new home

Madurai muthu new home

அந்த வகையில் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நகைச்சுவை மன்னனாக கலக்கிக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் கில்லாடியான இவர், தற்போது காலத்துக்கு ஏற்ப தன்னை அப்கிரேட் செய்து கொண்டு புராபர்டி காமெடியில் இறங்கி இருக்கிறார்.

38
Madurai muthu family

Madurai muthu family

இவர் செய்யும் புராபர்டி காமெடி தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி செய்வது மட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அங்குள்ள தமிழ் மக்களையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறார் மதுரை முத்து. 

48
Madurai muthu new home house warming

Madurai muthu new home house warming

நகைச்சுவையாக பேசி மக்களை மகிழ்வித்தாலும் மதுரை முத்துவின் வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்த பக்கங்களும் உள்ளன. இவர் முதன்முதலில் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த காதல் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மதுரை முத்துவின் மனைவி லேகா மரணமடைந்தார். மதுரை முத்து ஒரு முறை விபத்தில் சிக்கியபோது அவர் குணமடைய வேண்டி மொட்டை அடித்துக் கொண்டார் லேகா. அந்த அளவுக்கு அன்பான மனைவியாக இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்... ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்.. மக்கள் பணியில் தளபதி விஜயின் த.வெ.க - அசத்தும் கட்சியினர்!

58
Madurai muthu wife

Madurai muthu wife

மனைவியின் மறைவுக்கு பின் திருமணமே வேண்டாம் என மதுரை முத்து இருந்தாலும், குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. 32 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் மதுரை முத்து.

68
Madurai muthu kids

Madurai muthu kids

அவரின் இரண்டாவது மனைவி வேறுயாருமில்லை, லேகாவின் நெருங்கிய தோழியான ரித்து தானாம். பல் மருத்துவரான இவர் மதுரை முத்துவின் நிலை அறிந்து அவரை கரம்பிடித்தார். தற்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

78
Vijay TV Madurai muthu

Vijay TV Madurai muthu

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் மதுரை முத்து சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு சிம்பிளாக கிரஹப்பிரவேசமும் நடத்தி முடித்துள்ளார் மதுரை முத்து, இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

88
Madurai Muthu New Home House Warming Photos

Madurai Muthu New Home House Warming Photos

மதுரை முத்து கட்டிய பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பிராபர்டி காமெடி செய்தே பிராபர்டி வாங்கீட்டியே னா என கிண்டலடித்து வருவதோடு, வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அவர் வீட்டு கிரஹப்பிரவேச புகைப்படங்கள் வைரலாகின்றன.

இதையும் படியுங்கள்... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் தந்தை சிவகுமார்! சால்வே அணிவிக்க வந்த முதியவரை அவமதித்த வீடியோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved