ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்.. மக்கள் பணியில் தளபதி விஜயின் த.வெ.க - அசத்தும் கட்சியினர்!
Thalapathy Vijay : தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு செய்யப்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது.
குறிப்பாக சென்னையில் தொடர்நது மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தினர், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து வரும் நிலையில், தற்போது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் G.பாலமுருகன் ஆலோசனை மற்றும் அறிவுரையின்படி சென்னை அம்பத்தூர் பகுதிக்குட்டப்பட்ட 90வது வட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
90வது வட்ட நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான்(வழக்கறிஞர்) பாலாஜி, ஆகியோர் தலைமையில் சுமார் 250க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை, மற்றும் மாணவ, மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகங்ககள் போன்ற ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போது முதலே பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் தமிழக வெற்றிக் கழகம் பெரும் மாற்றம் கொண்டு வர முடியும் என்று கட்சியினர் இரவு பகலாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முன்னணி நடிகராகவும், அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஸ்டாராகவும் உள்ள தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகை தந்துள்ள செய்தி அவர் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில், முழு நேர அரசியலுக்காக அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் அரசியலில் முழு நேரம் ஈடுபடுவதால் இனி சினிமா துறைக்கு அவர் மீண்டும் வரமாட்டார் என்பது அவரது திரை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.