MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ajith First Car : இன்று பல சொகுசு கார்களுக்கு ஓனராக இருக்கும் அஜித்; முதன்முதலில் வாங்கிய கார் எது தெரியுமா?

Ajith First Car : இன்று பல சொகுசு கார்களுக்கு ஓனராக இருக்கும் அஜித்; முதன்முதலில் வாங்கிய கார் எது தெரியுமா?

தமிழ் தி்ரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், முதன்முதலில் வாங்கிய கார் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 15 2024, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ajithkumar

Ajithkumar

தமிழ் திரையுலகில் எந்த வித சினிமா பின்புலமும் இன்றி தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறி, இன்று பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் அஜித். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளிவந்த அமராவதி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், வஸந்த் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை திரைப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

24
Ajith car collection

Ajith car collection

இதையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்களம் என 1990-களில் இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க கோலிவுட்டில் அஜித்தின் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்தது. 2000க்கு முன்னர் வரை பேமிலி மற்றும் காதல் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த அஜித், 2000க்கு பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அதில் தீனா, சிட்டிசன், பில்லா போன்ற படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தன.

இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருக்கும் தகவலை கியூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்

34
Ajith owned cars

Ajith owned cars

பின்னர் கோலிவுட்டில் அசைக்க முடியாத உயரத்தை தொட்ட அஜித், இன்றளவும் அதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கப்பட இருக்கிறது.

44
Ajith First Car Maruthi 800

Ajith First Car Maruthi 800

இன்று ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கு அஜித், தன் வீட்டில் பல சொகுசு கார்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார். இன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை வாங்கி வைக்கும் அளவுக்கு செல்வ செழிப்போடு இருக்கும் அஜித், முதன்முதலில் வாங்கிய கார், மாருதி 800. அதுவும் சினிமாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவரால் அந்த காரை வாங்க முடிந்ததாம். அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு மைனர் மாப்பிள்ளை படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கு கார் வாங்கும் அளவுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாம். 

அந்த படத்துக்காக சம்பளம் வாங்கிய கையோடு தன்னுடைய முதல் காரை வாங்கி இருக்கிறார் அஜித். அந்த காரை பல ஆண்டுகளாக உபயோகித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதை தன் நண்பனிடம் கொடுத்துவிட்டாராம். அந்த நண்பர், இன்று வரையிலும் அந்த காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம். யார் கேட்டாலும் இது அஜித்தின் கார் என்று கெத்தாக சொல்லுவாராம். 

இதையும் படியுங்கள்... விஜய் டிவி பிரபலம்... காமெடி நடிகர் ஷேசுக்கு திடீர் மாரடைப்பு! காவேரி மருத்துவமனையில் அனுமதி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved