"இது எனக்கு முதல் படம்".. பிரெஞ்சு மொழியில் களமிறங்கும் நடிகை ராதிகா சரத்குமார் - போட்டோஸ் வைரல்!
தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பல நூறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ராதிகா சரத்குமார். இறுதியாக தமிழில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Radikaa
கடந்த 1978 ஆம் ஆண்டு மூத்த இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் ராதிகா சரத்குமார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக பல நூறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமார் அவர்களை ராதிகா திருமணம் செய்துகொண்டார்.
Radikaa Sarathkumar
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துள்ள நடிகை ராதிகா அவர்கள், சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
French movie
இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள், தற்பொழுது முதல் முறையாக பிரெஞ்சு மொழியில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்பொழுது இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்த தனது கணவர் சரத்குமார் அவர்களுக்கும் தனது மகள் மிதுன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.