அண்ணன் வரார் வழிவிடு.. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் லியோ.. வசூலில் DiCaprioவை ஓரம்கட்டிய தளபதி விஜய்!
தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம் அனுதினமும் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு வசூல் சாதனையை செய்து வருகிறது லியோ என்றால் அது மிகையல்ல.
lokesh kanagaraj movie
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் லியோ. விமர்சன ரீதியாக கலவையான ஃபீட்பேக் பெற்று வரும் பொழுதும், ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு வெளியான இந்திய சினிமாக்கள் பட்டியலில் உலக அளவில் 148 கோடி ரூபாயை ஒரே நாளில் வசூல் செய்த திரைப்படமாக மாறி உள்ளது லியோ.
Flower moon
மேலும் ஹாலிவுட்டில் இந்த வார இறுதியில் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் தயாரிப்பில் லியோனார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நீரோ மற்றும் லில்லி கிளாட்ஸ்டோன் ஆகியோர் நடித்தது வெளியான "கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்", திரைப்படம் சுமார் $44 மில்லியன் வசூலுடன் முதல் இடத்திலும், "டெய்லர் ஸ்விஃப்ட் நடிப்பில் உருவாகியுள்ள "தி ஈராஸ் டூர்" $41.5 மில்லியன் வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vijay
இருப்பினும், புதிய வெளியீடுகளில் உலகளாவிய வசூல் அடிப்படையில், தளபதி விஜய் அவர்களின் "லியோ" திரைப்படம் சுமார் $48.5 மில்லியனை (வெளியான நான்கு நாட்களுக்குப் பிறகு) வசூல் செய்து, "கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்" வசூல் செய்ததை விட அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில், "லியோ" படம் பிரத்யங்கிரா சினிமாஸ் மூலம் வெளியிடப்பட்டது மற்றும் வார இறுதியில் $2.1 மில்லியன் வசூல் செய்தது.
மேலும் UK மற்றும் அயர்லாந்தில் இது அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடப்பட்டது மற்றும் வெளியான முதல் மூன்று நாட்களில் £1.07 மில்லியன் ($1.3 மில்லியன்) வசூலித்தது குறிப்பிடத்தக்கது.