MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யூடியூபில் கொட்டும் பணம்... இர்ஃபான் துவங்கியுள்ள பிரமாண்ட ஸ்டுடியோவை திறந்து வைத்த நடிகர் கார்த்தி! போட்டோஸ்!

யூடியூபில் கொட்டும் பணம்... இர்ஃபான் துவங்கியுள்ள பிரமாண்ட ஸ்டுடியோவை திறந்து வைத்த நடிகர் கார்த்தி! போட்டோஸ்!

யூடியூபர் இர்ஃபான்,  புதிதாக துவங்க உள்ள ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை,  நடிகர் கார்த்தி திறந்து வைத்து வாழ்த்து கூறிய நிலையில், இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 23 2023, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

யூடியூபர் இர்ஃபான்,  YouTube உலகத்தில் மிகவும் பிரபலம், இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமான முகமாக மாற்றியுள்ளது. 2016 இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கினார் இர்ஃபான், ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம்  இதுவரை 2100 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். 

28

இவரது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் சிறந்த உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் மூலம், YouTube, Instagram மற்றும் Facebook முழுவதுமாக 6 மில்லியன் ஃபாலோயர்ஸ்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். 

விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?

38

யூடியூப் மூலம் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் இர்ஃபான் தற்போது,  ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ எனும் புதிய ஸ்டுடியோவை, நடிகர் கார்த்தி சமீபத்தில் தொடங்கி வைத்தார். சென்னை - நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ, படப்பிடிப்பு, படத்தொகுப்பு, சிஜி மற்றும் அனிமேஷன் வேலைகளுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

48

உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வீடியோக்களால் புகழ்பெற்றுள்ள யூடியூபர் முகமது இர்ஃபானுக்கு இது மற்றுமொரு மாபெரும் மைல்கல் சாதனையாகும். இந்த ஸ்டுடியோ  சமூக ஊடக மேலாண்மை, திரைப்படம் மற்றும் பிராண்ட் விளம்பரங்கள் உட்பட பல புதிய-செயல்பாடுகளில் களமிறங்கி பணியாற்றவுள்ளது.

Ramya Pandian: நவராத்திரி ஸ்பெஷல்.. தாமரை மேல் அமர்ந்திருக்கும் துர்கா தேவியாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்

58

நடிகர் கார்த்தி இந்த புதிய ஸ்டுடியோவைத் திறந்து வைத்து, இக்குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் விருப்பமான தொழிலைத் தொடரும் அவர்களின் நேர்மையான முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இர்ஃபானின் வீடியோக்கள் தனக்கு  மிகவும் பிடிக்குமென்றும், அவரது வியக்கத்தக்க சாதனைக்காகவும் இர்ஃபானை வாழ்த்தினார். மதன் கௌரி, பரிதாபங்கள் கோபி & சுதாகர், கிஷன் தாஸ் மற்றும் பல யூடியூப் ஐகான்களும் இந்த துவக்க விழாவினில் கலந்துகொண்டு இர்ஃபானை வாழ்த்தினர். சித்தார்த் சந்திரசேகர் வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த ஸ்டுடியோ அனைவரையும் ஈர்க்கும் வகையில் அழகுடன் அமைந்திருந்தது. 

68

முகமது இர்ஃபான் கூறுகையில்..,  “எனது ஸ்டுடியோவை கார்த்தி சார் போன்ற ஒரு அற்புதமான ஆளுமை திறந்து வைத்தது என் வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான தருணமாகும். நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தால் முதலிடத்தைப் பெற முடியாது, கடின உழைப்பு, நேர்மை, ஆர்வம், விட்டுக்கொடுக்காத மனப்பான்மை வேண்டும் என்பதை நிரூபித்த அவர், இளைஞர்கள் அனைவருக்கும் பெரும் உத்வேகமாக இருந்து வருகிறார். அர்ப்பணிப்பு உங்களுக்கு எப்போதும் வெற்றியைத் தரும். இந்த துவக்க விழாவில் அவர் கலந்துகொண்டது எனக்கு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்துள்ளது. விழாவை சிறப்பித்த தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சமீர் பரத் ராம் ஆகியோருக்கு நன்றி என்றார். 

Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!

78

மேலும் யூடியூப், ஆன்லைன் மற்றும் சமூக ஊடக உலகில் உள்ள எனது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டது இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பாக அமைந்தது. எனது வாழ்க்கையை மேம்படுத்துவதில் தூணாக இருப்பவர்கள் மக்கள் தான்,  அவர்களை மகிழ்விக்கும் வகையில் எனது ஸ்டுடியோவிலிருந்து சிறந்த படைப்புகளை வழங்குவதற்கான,அதிக பொறுப்புகளுடன் அடுத்த கட்டத்தை,  நோக்கி நான் பயணிக்கவுள்ளேன்.

88

முகமது இர்ஃபான் தற்போது ஓரிரு திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நிகழ்ந்து வருகிறது. இனி ரசிகர்கள் அவரை பெரிய திரையில்  முக்கிய கதாபாத்திரங்களில் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved