MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Varalaxmi Photos: பிரதமர் மோடிக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்த சரத்குமார்!!

Varalaxmi Photos: பிரதமர் மோடிக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்த சரத்குமார்!!

தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ள சரத்குமார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, வரலட்சுமி - நிக்கோலாய் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

2 Min read
Ramya s
Published : Jun 29 2024, 11:29 AM IST| Updated : Jun 29 2024, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Varalaxmi Photos

Varalaxmi Photos

விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான போடா போடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி. முதல் படத்திலேயே தனது வெகு இயல்பான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

211
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar Marriage

தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நெகட்டிவ் ரோல் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். சமீபத்தில் ஹனுமான் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

311
Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar

இதனிடையே வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் எளிய முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. 

411
Radhika Sarathkumar

Radhika Sarathkumar

இந்த நிலையில் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது.

511
Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar

இதற்காக சரத்குமார் – ராதிகா சரத்குமார் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

 

 

611
Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar

மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், கீர்த்தி சுரேஷ், மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நயன் தாரா, விக்னேஷ் சிவன், சித்தார்த் என பல பிரபலங்களுக்கும் ருமண அழைப்பிதழை வழங்கினர். அதே போல் தெலுங்கு, கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு திருமண அழைப்பிதழை வரலட்சுமி வழங்கி வருகிறார்.

 

711
Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ள சரத்குமார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்.

 

811
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar Marriage

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவையில் வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பில் கலந்து  கொள்வதற்கான திருமண் அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

911
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar Marriage

அதே போல் மத்திய இணையமைச்சர் எல். முருகனை சந்தித்த சரத்குமார் குடும்பத்தினர், வரலட்சுமி திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். 

1011
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar Marriage

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அவருக்கு வரலட்சுமி - நிக்கோலாய் திருமண அழைப்பிதழை வழங்கினர். 

1111
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar Marriage

சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் டெல்லியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved