MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்

2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்

பிக்பாஸ் ஜோவிகாவின் தந்தை யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 10 2023, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vanitha daughter jovika

Vanitha daughter jovika

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, முதன்முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த வனிதா பின்னர் ராஜன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார் வனிதா. இந்த திருமண வாழ்க்கையும் ஒரு சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. நடிகை வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும், ஜோவிகா, ஜெய்னிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
vanitha daughters Jovika, Jaynitha

vanitha daughters Jovika, Jaynitha

இதில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரியும், மகள் ஜோவிகாவும் ஆகாஷுக்கு பிறந்தவர்கள், அதேபோல் ஜெய்னிதா இரண்டவாது கணவர் ராஜனுக்கு பிறந்தவர். ஆனால் வனிதா பிக்பாஸில் கலந்துகொண்ட சமயத்தில் அவரின் இரண்டாவது கணவர் அளித்த பேட்டி ஒன்றில் ஜோவிகா, ஆகாஷின் மகள் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். வனிதா ஆகாஷை விவாகரத்து செய்த பின்னர், அருண் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜோவிகா என்றும் கூறி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
vanitha rajan

vanitha rajan

ராஜனின் இந்த பேட்டி தற்போது வைரலானதை அடுத்து, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடிய வனிதாவிடமே ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்தனர். இதற்கு வனிதா, ஜோவிகா ஆகாஷின் மகள் தான், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஜோவிகா அவரது தந்தை பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவரது பெயரை தான் இனிஷியலாக வைத்திருக்கிறார் என விளக்கம் அளித்தார்.

44
vanitha akash

vanitha akash

அதேபோல் தாங்கள் தன் கணவர் ஆகாஷோடு இன்னும் தொடர்பில் தான் இருக்கிறீர்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த வனிதா, ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் தற்போது குழந்தைகளுக்காக நான் என் முன்னாள் கணவர்கள் ஆகாஷ் மற்றும் ராஜன் இருவருடனும் தொடர்பில் தான் இருக்கிறேன் என கூறியுள்ள வனிதா, தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்... நடு ரோட்டில் நயன் உடன் விக்கி எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved