அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்... நடு ரோட்டில் நயன் உடன் விக்கி எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் இதோ
நடிகை நயன்தாராவும், அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனும் நடுரோட்டில் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
nayanthara, vignesh shivan
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தான். திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் குறையாத காதலுடன் இந்த ஜோடி வலம் வருகிறது. குறிப்பாக கல்யாணத்துக்கு பின்னர் பல்வேறு பிசினஸில் முதலீடு செய்து, தொழிலதிபர்களாக வலம் வருகின்றனர் நயன் - விக்கி ஜோடி. சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் இணைந்து 9ஸ்கின் என்கிற நிறுவனத்தை தொடங்கி இருந்தனர்.
nayanthara husband vignesh shivan
சருமத்திற்கான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இது தங்களின் 6 வருட உழைப்பு என்று விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி உடன் கூறி இருந்தார். இந்த பிசினஸ் கடந்த மாதம் மலேசியாவில் தொடங்கப்பட்டது. அப்போது 9ஸ்கின் நிறுவனத்திற்காக நயன்தாரா கடுமையாக உழைத்துள்ளதாகவும், அதன் அழகு சாதன பொருட்கள் ஒவ்வொன்றையும் நயன்தாராவே உபயோகித்து பார்த்து தேர்வு செய்ததாக விக்கி கூறி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
nayanthara, vignesh shivan romantic photo
அதுமட்டுமின்றி தனது பட புரமோஷன்களுக்கு செல்லாத நயன்தாரா, 9ஸ்கின் நிறுவனத்தை படு பிசியாக புரமோட் செய்ததும் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கும் விளக்கம் கொடுத்த விக்னேஷ் சிவன், ஒரு நல்ல படம் அதற்கான விமர்சனத்தை அதுவே தேடிக்கொள்ளும் என்பது தான் நயன்தாராவின் பாலிசி என பேசி இருந்தார். தற்போது 9ஸ்கின் நிறுவன பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளதால் நயன் - விக்கி இருவருமே செம்ம ஹாப்பியாக உள்ளனர்.
nayanthara latest photos with vignesh shivan
இந்நிலையில், தனது காதல் மனைவி நயன்தாரா உடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நடு ரோட்டில் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பதிவிட்டு தான் எழுதிய நான் பிழை பாடலில் இடம்பெற்ற ‘அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்' என்கிற வரிகளை கேப்ஷனாக கொடுத்துள்ளார் விக்கி.
இதையும் படியுங்கள்...Simbu Net Worth: 1 வயதில் குழந்தை நட்சத்திரம்.. 18 வயசில் ஹீரோ.! இப்போ 40 வயதாகும் சிம்புவின் சொத்து மதிப்பு?