சில்க் ஸ்மிதாவின் நிழலாக இருந்த தாடிக்காரர் யார்? தென்னாட்டு பேரழகியின் தெரியாத பக்கங்கள்
சில்க் ஸ்மிதாவின் மரணம் மர்மமாக இருக்கும் நிலையில், அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத சில ஆச்சர்ய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
Silk Smitha
தென்னாட்டு பேரழகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. அவரின் சொந்த வாழ்க்கை பற்றி வெளிவந்த செய்திகள் ஏராளம். அப்படி சில்க் ஸ்மிதாவின் நிழலாக இருந்த தாடிக்காரர் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவற்றையெல்லாம் சில்க் பெரிதுபடுத்தவில்லை. ஒரு முறை சில்க்கை அறிமுகப்படுத்திய வினுச்சக்கரவர்த்திக்கும் சில்க் ஸ்மிதாவுக்கு இடையேயான உறவு பற்றி தவறான கண்ணோட்டத்தில் செய்திகள் வெளிவந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில்க், வினுச்சக்கரவர்த்தி தன்னுடைய குருநாதர் என்றும் அவரப்பற்றி அவதூறு பரப்புவதா என்று கேள்வி எழுப்பினார்.
Glamour Queen Silk Smitha
இந்த பரபரப்புகள் எல்லாம் தொடர்ந்துகொண்டிருந்தபோதே கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சில்க் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. சில்க் ஸ்மிதா, தற்கொலை செய்துகொண்டார் என்று ஒருதரப்பு கூற, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தை கிளப்பியது மற்றொரு தரப்பு.
Silk Smitha death
சில்க் ஸ்மிதாவை சொத்துக்காக கொன்றுவிட்டார்கள் என்று அவரது உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை கூறி கதறி அழுதனர். ஆனால் அப்போது அவர்களது குரல் எடுபடவில்லை. சில்க்கின் மரணத்தில் டஜன் கணக்கில் கேள்வி எழுப்பப்பட்டாலும், அது தற்கொலை என அந்த வழக்கை முடித்து வைத்தது காவல்துறை. இருப்பினும் அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்றுவரை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இதையும் படியுங்கள்... அந்த ஸ்டார் நடிகையுடன் மட்டும் நடிக்காத NTR! ரகசியம் என்ன?
Silk Smitha photos
1990-களின் தொடக்கத்தில் சில்க் ஸ்மிதா காதல் வயப்பட்டதாகவும், தனது காதலருக்காக திரைப்படம் தயாரித்ததாகவும் சொல்லப்பட்டது. அதில் ஏற்பட்ட நஷ்டம் தான் சில்க்கை தற்கொலை நோக்கி நகர்த்தியதாக கூறப்பட்டது. சில்க் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை. அவர் கொலை தான் செய்யப்பட்டு இருக்கிறார் அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான திருப்பதி ராஜா.
Silk Smitha love
சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தையோடு இருந்த ஒரு தாடிக்காரர் திடீரென வந்து ஒட்டிக்கொண்டதாகவும், கால்ஷீட் மற்றும் சினிமா சம்பந்தமான வேலைகளை அந்த நபர் தான் கவனித்து வந்தாராம். அவரை சில்க் மிகவும் நம்பியதாக கூறும் சில்க்கின் சகோதரர் நாக பிரசாத், அந்த தாடிக்காரர் தான் சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
Silk Smitha pics
சில்க் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் அவரது தாயார் வந்து அவரை சந்தித்து சென்றதாகவும், அப்போது தற்கொலை செய்யும் மனநிலையில அவர் இல்லை என்று கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் கூறி இருந்தார் சில்க்கின் சகோதரர். சில்க் ஸ்மிதா எழுதியதாக கூறப்பட்ட தற்கொலை கடிதம் போலியானது என்றும் அதில் இருப்பது சில்க்கின் கையெழுத்தே இல்லை என்று சில்க்கின் சகோதரர் புலம்பினார். ஆனால் அவரது புலம்பல்கள் எடுபடவில்லை.
untold story of Silk Smitha
வாழும்போது சந்தோஷத்தை இழந்து மர்ம தேசத்தில் வாழ்ந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் கூட மர்மமாகவே உள்ளது. வாழ்ந்த காலத்தில் ஹீரோயின்களை விட அதிக சம்பளம் வாங்கிய சில்க் ஸ்மிதாவின் மறைவுக்கு சக நடிகைகளே கண்ணீர் வடித்தனர். சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்று வரை அவரை கொண்டாடி வருகிறது தமிழ் சினிமா. ஆயிரம் நடிகைகள் வரலாம், கவர்ச்சி காட்டலாம், குத்தாட்டம் போடலாம், ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படியுங்கள்... விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் எல்லாம் ரொம்ப கம்மி... தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ