MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அந்த ஸ்டார் நடிகையுடன் மட்டும் நடிக்காத NTR! ரகசியம் என்ன?

அந்த ஸ்டார் நடிகையுடன் மட்டும் நடிக்காத NTR! ரகசியம் என்ன?

என்டிஆர் பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆனால் ஒரு நடிகையுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அவர்களுக்கு இடையே நடந்த சண்டை காரணமாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : Dhanalakshmi G
Published : Aug 16 2024, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூனியர் NTR

ஜூனியர் NTR

நந்தமுரி வம்சத்தின் வாரிசு நடிகர் என்டிஆர் டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இளம் வயதில் ஹீரோவாக அறிமுகமானார். ஸ்டூடென்ட் நம்பர் ஒன், ஆதி, சிம்ஹாத்ரி போன்ற படங்களின் மூலம் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உயர்ந்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் என்டிஆர் பான் இந்தியா ஸ்டாரானார். இருபது ஆண்டுகளுக்கும்  மேலான தனது திரை வாழ்க்கையில் என்டிஆர் பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அனுஷ்கா ஷெட்டி ஜூனியர் என்டிஆர்

அனுஷ்கா ஷெட்டி ஜூனியர் என்டிஆர்


ஒரு முன்னணி நடிகையுடன் என்டிஆர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதற்கு ஒரு சர்ச்சை தான் காரணமாம். அவர்கள் கூட்டணியில் ஒரு படம் திரைக்கு வரவிருந்த நிலையில், அது கைவிடப்பட்டதாம். அந்த முன்னணி நடிகை வேறு யாருமில்லை... அனுஷ்கா ஷெட்டி தான். என்டிஆருடன் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. சின்னதம்பி படத்தில் ஒரு பார்ட்டி பாடலில் வெங்கடேஷ், என்டிஆர், அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் ஒன்றாக நடனமாடியுள்ளனர். 


 

35
அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி - என்டிஆர் கூட்டணியில் ஒரு படம் வெளியாகாமல் போனதாம். இயக்குனர் மேஹர் ரமேஷ், சக்தி படத்திற்கு ஹீரோயினாக அனுஷ்கா ஷெட்டியை நினைத்திருந்தாராம். அவருக்கு கதையை கூறி தேதிகளையும் பெற்றாராம். எல்லாம் சரி என்று நினைத்த பிறகு, அவருக்கு பதிலாக இலியானாவை ஒப்பந்தம் செய்தார்களாம். அருந்ததி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அனுஷ்கா ஷெட்டி அதிக அளவு சம்பளம் கேட்கிறார் என்ற ஒரு வதந்தியைப் பரப்பினார்களாம். அதை உண்மை என்று நம்பிய படக்குழுவினர்.. சக்தி படத்தில் ஹீரோயினாக அனுஷ்காவை வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். 

45
இலியானா

இலியானா


சக்தி படத்தில் என்டிஆருக்கு ஜோடியாக இலியானா நடித்தார். அதன் மூலம் என்டிஆர் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அனுஷ்கா இழந்தாராம். இருப்பினும் அனுஷ்கா மிகவும் உயரம். என்டிஆர் குட்டையாக இருப்பார். இதனால் தான் எந்த இயக்குனரும் துணிந்து அவர்களை ஜோடி சேர்க்கவில்லை என்ற  பேச்சும் உள்ளது. என்ன ஆனாலும் ஒரு அற்புதமான கூட்டணியை ரசிகர்கள் இழந்துவிட்டனர். 

 

55
சக்தி படம்

சக்தி படம்

மேஹர் ரமேஷ் இயக்கிய சக்தி படம் தோல்வியடைந்தது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அஸ்வினி தத் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். சில காலம் அவர் படங்களை தயாரிக்கவில்லை. சக்தி படத்தில் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்தார். என்டிஆர்-இலியானா இடையேயான கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருக்கும். மணிசர்மா பாடல்கள் இன்னும் ரசிக்க வைத்தன.  
 

About the Author

DG
Dhanalakshmi G
செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனுஷ்கா ஷெட்டி
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.4 ov)108/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 84 runs in 56 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved