முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள திரிஷா - நயன்தாரா... அதுவும் இந்த லெஜண்ட்ஸ் படத்திலா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவும், நயன்தாராவும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள தகவல் கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.
Trisha, Nayanthara
தமிழ் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோயின்களாக வலம் வருபவர்கள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் இன்றளவும் குறையாத இளமையுடன், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர். கோலிவுட்டில் உள்ள டாப் நடிகர்களின் படங்கள் எல்லாம் இவர்கள் இருவரின் கைவசம் தான் உள்ளது. அந்த அளவுக்கு திரிஷாவும், நயனும் பிசியாக நடித்து வருகின்றனர்.
Trisha Nayanthara act together
நடிகை திரிஷா அண்மையில் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது. இதையடுத்து அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நடிகை நயன்தாரா அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
trisha nayanthara in KH234 movie
இதையடுத்து தமிழில் மண்ணாங்கட்டி, அன்னபூரணி உள்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா. இப்படி இருவரும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும், ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. அந்த குறையை தீர்க்கும் வகையில், திரிஷாவும், நயன்தாராவும் முதன்முறையாக ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்களாம். அதுவும் தமிழ் சினிமாவின் லெஜண்ட்டுகளான கமலும், மணிரத்னமும் இணையும் KH234 படத்தில் தான் இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளார்களாம்.
Kamalhaasan, Maniratnam
நடிகை திரிஷா இதற்கு முன்னர் கமலுடன் இதற்கு முன்னர் தூங்காவனம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் நயன்தாரா, கமலுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை ஆகும். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... அம்பானியின் ஆடம்பர மால் திறப்பு விழா! டார்லிங்ஸோடு வந்து கலந்துகொண்ட கோலிவுட் நடிகைகளின் கியூட் கிளிக்ஸ் இதோ