கிளாமர் நாயகிகள் மட்டுமில்ல.. செமயா பாட்டும் பாடுவாங்க - தமிழ் சினிமாவை தன் குரலால் அசரடித்த டாப் 3 சிங்கர்ஸ்!
தமிழ் திரையுலகை பொருத்தவரை பன்முகத் திறமை கொண்ட பல்வேறு நடிகர் நடிகைகள் கொண்ட ஒரு திரையுலகமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னணி நாயகிகளாக வளம் வந்த சில சிறந்த பாடகிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Ramya Nambeesan
கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகியாக களமிறங்கிய நடிகை தான் ரம்யா நம்பீசன். கடந்த 23 ஆண்டுகளாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பாண்டியநாடு திரைப்படத்தில் வரும் பை.. பை.. பை.. கலாச்சி பை பாடலை பாடியது இவர்தான். அது மட்டும் இல்லாமல் எண்ணற்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
Andrea
ஆண்ட்ரியா ஒரு முன்னணி நடிகை என்று நாம் அனைவரும் அறிவோம், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் ஒரு பாடகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் வரும் "கண்ணும் கண்ணும் நோக்கியா" என்கின்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியது ஆண்ட்ரியா தான். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இன்றளவும் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகின்றார் ஆண்ட்ரியா.
Vasundhara Das
கடந்த 2000வது ஆண்டு வெளியான கமல்ஹாசன் அவர்களின் ஹே ராம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கியவங்க தான் வசுந்தரா தாஸ். அதன்பிறகு தமிழில் சிட்டிசன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் 7 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இவர் பயணித்து இருந்தாலும், சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் 30க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். குறிப்பாக முதல்வன் திரைப்படத்தில் வரும் "சகலக்க பேபி" பாடலையும், ரிதம் திரைப்படத்தில் வரும் "ஐயோ பத்திக்கிச்சு" பாடலையும் பாடியது இவர்தான். அது மட்டும் இல்லாமல் சிட்டிசன் திரைப்படத்தில் வரும் "பூக்காரி பூக்காரி" பாடலை பாடியதும் வசுந்தரா தாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.