MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சிவப்பு ரோஜாக்கள் முதல் இறைவன் வரை.. திக் திக் காட்சிகளுடன்.. வெளியான தரமான 10 சைக்கோ திரில்லர் படங்கள்!

சிவப்பு ரோஜாக்கள் முதல் இறைவன் வரை.. திக் திக் காட்சிகளுடன்.. வெளியான தரமான 10 சைக்கோ திரில்லர் படங்கள்!

எத்தனையோ ஜர்னர்களில் படம் வெளியானாலும், சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இது போன்ற கதைகள் பெரும்பாலும், உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்து எடுக்கப்படுவதே இதற்க்கு காரணம். சரி தமிழில் இதுவரை வெளியான தரமான, 10 சைக்கோ திரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம். 

4 Min read
Author : manimegalai a
Published : Sep 29 2023, 07:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Sigappu Rojakkal

Sigappu Rojakkal

சிவப்பு ரோஜாக்கள்:

இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சிவப்பு ரோஜாக்கள்'. வெற்றிகரமான தொழிலதிபரின் கருப்பு பக்கத்தை இப்படம் வெளிப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப்படம் தமிழில் சுமார் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் இந்த படம் ரெட் ரோஸ் என்கிற பெயரில் ஹிந்தியிலும் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Aalavanthan

Aalavanthan

ஆளவந்தான்:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. சிறுவயதிலே சித்தியின் கொடுமைக்கு ஆளாக்கப்படும் ஒரு கமல்ஹாசன் பின்னர் சைக்கோவாக மாறி, சிறு வயதிலேயே சித்தியை கொலை செய்கிறார். பின்னர் தன்னுடைய சகோதரனின் மனைவியையும் கொலை செய்ய நினைக்க எப்படி சைக்கோ கமலிடம் இருந்து... மற்றொரு கமல் மனைவியை காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்திற்கு, ஷங்கர் மஹாதேவன் இசையமைத்திருந்தார். மனிஷா கொய்ராலா, ரவீணா டாண்டன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி! 'அரண்மனை 4' ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

310
Anniyan

Anniyan

அந்நியன்:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு 'அந்நியன்' படம் வெளியானது.  பன் மனோபாவ ஒழுங்கின்மை மனநோயாள்  பாதிக்கப்படும் விக்ரம், சமூக பிரச்சனை, பொய், ஏமாற்றுவது போன்ற  கண்டு கொந்தளிக்கும் போது சைக்கோவாக மாறுகிறார். அநியாயம் செய்பவர்களுக்கு கருணாபுராணத்தின் படி தண்டனை வழங்குவார். இந்த படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விக்ரமுக்கு ஜோடியாக சதா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில், விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

410
Nadunisi Naigal

Nadunisi Naigal

நடுநிசி நாய்கள்:

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், வெளியான சைக்கோ திரில்லர் திரைப்படம். சிறு வயதில் தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒருவன், வருங்காலத்தில் எப்படி ஒரு சைக்கோவாக மாறி பல பெண்களை கொலை செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. கெளதம் மேனனின் இந்த புதிய அட்டெம்ப்ட் பாராட்ட பட்டாலும், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

Biggboss 7: ஆள விடுங்க.. நைசாக கழண்டு கொண்ட அப்பாஸ்! பிரபல ஹீரோவை தொக்காக தூக்கிய பிக்பாஸ்! அப்போ ரணகளம் தான்!

510
Ratsasan:

Ratsasan:

ராட்சஷன்: 

விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில், மரபணு குறைபாட்டால் வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்படும் மாணவனுக்கு, தன் மீது அன்பு காட்டும் மாணவி மீது காதல் வர, அவனுக்கு இருக்கும் ஆண்மையின்மை பிரச்னையை காரணம் காட்டி அந்த பெண் காதலை நிராகரிக்கிறார். பின்னர் அந்த பெண்ணை கொலை செய்யும் அவர்... தொடர்ந்து தன்னை கிண்டல் செய்பவர்களை டார்கெட் செய்து, பெண் வேடத்தில் சென்று கொள்கிறார். ஜிப்ரான் இசையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, சைக்கோ திரில்லர் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

610
Psycho:

Psycho:

சைக்கோ:

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராய் நடிப்பில் வெளியான திரைப்படம்... 'சைக்கோ'. சைக்கோ ஒருவரிடம் மாட்டுக்கொள்ளும் கதாநாயகி, அவரை பற்றி பயம் கொள்ளாமல், தன்னை பார்வையற்ற காதலன் காப்பாற்ற வருவான் என்பதை நம்புகிறாள். கடைசியில் அவர் காப்பாற்றப்பட்டாரா? எப்படி அந்த சைக்கோ மன நோயாளியாக மாறுகிறார், கால் முடியாத போலீஸ் அதிகாரி கண் தெரியாத ஒருவருக்கு எந்த விதத்தில் உதவுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. இளையராஜா இசையில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, உதயநிதியின் மற்றொரு நடிப்பின் பரிமாணத்தையும் காட்டியது குறிப்பிடத்தக்கது.

சென்சார் போர்டில் லஞ்சம் வாங்குவதாக விஷால் கூறிய குற்றச்சாட்டு! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு!
 

710
Netrikann

Netrikann

நெற்றிக்கண்:

நடிகை நயன்தாரா  இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் நெற்றிக்கண். போலீஸ் அதிகாரியான நயன்தாரா விபத்தில் பார்வையை இழந்த பின்னர், சைக்கோ ஒருவரிடம் சிக்குகிறார். மருத்துவரான அந்த சைக்கோவுக்கு பெண்களை துன்புறுத்தி அவர்களுடன் உறவு கோவத்தால் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். இவரின் மனைவி நயன்தாரா போலவே இருப்பார். அவர் இறந்து விட்டதால் கண் தெரியாத நயன்தாராவை அடைய நினைக்கிறார். அவரின் ஆசை நிறைவேறுகிறதா? நயன்தாரா அவரின் பிடிப்பில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. மிலித் ராவ் இயக்கிய இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா தயாரித்து நடித்திருந்த இந்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

810
Aneethi:

Aneethi:

அநீதி:

எதார்த்தமான கதைக்களத்தில் படங்களை இயக்கம், இயக்குனர் வசந்த பாலன் இயக்கிய திரைப்படம் தான் 'அநீதி'. சிறிய வயதில் தன்னுடைய தந்தை ஒரு சாக்லேட் எடுத்ததற்காக போலீசில் திருட்டு பழியோடு ஒப்படைக்கப்படுகிறார். அவர்கள் கடுமையாக தாக்கியதால், காயமடைந்து மூச்சு விட முடியாமல் உயிரிழக்கிறார். எனவே சாக்லேட்டை பார்த்தாலே வெறுக்கும் கதாநாயகன் மனநோயால் பாதிக்கப்படுகிறார். காதலியால் இவரிடம் மாற்றம் ஏற்பட்டாலும், பின்னர் எப்படி மீண்டும் கொலை செய்யும் அளவுக்கு மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். சமீபத்தில் வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பல வருடங்களுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்! எந்த சீரியல் தெரியுமா?

910
Por Thozhil

Por Thozhil

போர் தொழில்:

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அசோக் செல்வன் - சரத்குமார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். பல பெண்களை கழுத்தை நெரித்து தன்னுடைய சந்தோஷத்திற்காக கொலை செய்யும் சைக்கோ பற்றி, இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜாக்ஸ் பிஜாய் இசைமைத்திருந்த இந்த படம், இந்த ஆண்டு வெளியான மிகசிறந்த சைக்கோ திரில்லர் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1010
Iraivan:

Iraivan:

இறைவன்:

இந்த வாரம், ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. தேடி தேடி கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரன், போலீசுக்கே தண்ணி காட்டும் நிலையில், அவரை போலீஸ் கண்டு பிடிக்கிறார்களா? இல்லையா என்பதே இந்த படத்தின் கதை. போர் தொழில் படத்தின் தாக்கம் இந்த படத்தில் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்
நயன்தாரா
ஜெயம் ரவி
விஷ்ணு விஷால்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved