MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kanaa Serial : திருமணம் காரணமாக விலகிய நாயகி... கனா சீரியலின் ஹீரோயின் அதிரடியாக மாற்றம்

Kanaa Serial : திருமணம் காரணமாக விலகிய நாயகி... கனா சீரியலின் ஹீரோயின் அதிரடியாக மாற்றம்

கனா சீரியலில் அன்பரசி என்கிற கேரக்டரில் நடித்து வந்த தர்ஷனா அசோகன் தற்போது அந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதில் புது ஹீரோயின் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 02 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kanaa serial

kanaa serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள்? ஓட்டப்பந்த போட்டியில் தடைகளை தாண்டி நாயகி எப்படி சந்திக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
kanaa serial heroine changed

kanaa serial heroine changed

இந்த சீரியலில் நாயகியாக தர்ஷனா அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அன்பரசியாக நடித்து வரும் தர்ஷனா திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக ஏற்கனவே தகவல் பரவிய நிலையில் தற்போது வெளியேறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதையும் படியுங்கள்... கள்வன் முதல் ஃபேமிலி ஸ்டார் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

34
Dharshana Ashokan

Dharshana Ashokan

மேலும் அவருக்கு பதிலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான டோனிஷா என்பவர் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தெலுங்குவில் ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியலிலும் மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

44
tonisha kapileswarapu

tonisha kapileswarapu

கனா சீரியல் ஜீ தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த தர்ஷனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அவர் விலகி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக இந்த சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள டோனிஷாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Vijay Deverakonda : ஒரு நல்ல தலைவருக்கான "அந்த தகுதி" விஜயிடம் இருக்கு - மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved