Today Gold Rate in Chennai : தீபாவளி முடிந்ததுமே வேலையை காட்ட ஆரம்பித்த தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,590க்கு விற்பனையானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இன்றைய (நவம்பர் 14) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,085ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,680ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.76.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.