பக்தர்களே ரெடியா! திருப்பதி கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் எப்போது ? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
Tirumala Tirupati Devasthanam: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நவம்பர் மாதம் சாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுகள் குறிப்பிட்ட தேதிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
Tirumala Tirupati
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மட்டும் வார இறுதி நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய பல்வேறு முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்.
November Month Online Ticket
அந்த வகையில், நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் 21ம் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட தேதியில் சேவைகளில் கலந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: வரலட்சுமி விரதம் 2024 : வீட்டில் கலசம் அமைக்கும் முறை பற்றி தெரியுமா?
Tirumala Tirupati Temple
அதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
Rooms Reservation
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி 3 மணிக்கும், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
இதையும் படிங்க: திருப்பதியில் ஒருநாள் அன்னதானத்திற்கு மட்டும் இத்தனை லட்சம் செலவாகுமா? வெளியான பிரமிப்பூட்டும் தகவல்
Tirumala Tirupati Devasthanam
பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர் திட்டத்தில் சேவை செய்ய 27ம் தேதி காலை 11 மணிக்கும், ஏழுமலையானுக்கு வெண்ணைய் தயார் செய்யும் நவநீத சேவைக்கு 12 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே முன்பதிவு செய்து என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.