ஒரு பாட்டு முடிஞ்சுருச்சு.. அடுத்து சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு Fight.. பரபரப்பாக நகரும் தளபதி 68 - அப்டேட் இதோ!
Thalapathy 68 Update : தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தனது அடுத்த பட பணிகளில் இறங்கியுள்ளார் விஜய். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படம், விஜய் அவர்களின் 68வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
vijay
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது 68வது படத்தில் பிரபல நடிகர்கள் பிரபு தேவா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை முடிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
Venkat Prabhu
அந்த பாடல் காட்சி, விஜய், பிரபு தேவா மற்றும் பிரஷாந்த் ஆகிய மூவரும் இடம்பெறும் பாடல் என்றும். De-Aging தொழில்நுட்பத்தை கொண்டு அந்த பாடல் எடிட் செய்யப்படவுள்ளது என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே அந்த பாடல் இளம் வயது விஜய், தனது இரு நண்பர்களுடன் இணைந்து பாடும் பாடலாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thalapathy 68 Update
மேலும் தற்போது தளபதி 68 படக்குழு தென்னாபிரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளது என்றும், அங்கு ஒரு சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அவர்களின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.