Teachers Day 2024 : ஆசிரியர் தின வாழ்த்துக்கள், whatsapp ஸ்டேட்டஸ்கள் மற்றும் பல..
Teachers Day Wishes 2024 : ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு பிடித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களை அனுப்புவதற்கான சில மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நம்முடைய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி அன்று, ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்ப விரும்பினால், சில மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவை.
எத்தனை புத்தகங்கள் படித்தாலும், குருவின் இடத்தை பிடிக்க முடியாது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அன்புள்ள ஆசிரியரே!
இதையும் படிங்க: Teachers Day 2024 : செப். 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுவது ஏன்?
என் ஆசிரியரே! உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற முடியாது. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
குருவே ! நீங்கள்தான் எங்களுக்கு ஒளி விளக்கு. ஒவ்வொரு மாணவ மாணவிகளின் திறனையும் நம்பி வழிகாட்டியவர் நீங்களே. உங்களது அர்ப்பணிப்பு யாருக்கும் வராது. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க: ஆசிரியர் தினம் 2024 : டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
வாழ்க்கையில் விடாமுயற்சி செய்தால், கண்டிப்பாக எந்த இலக்கையும் சுலபமாக அடைந்து விடலாம் என்று சொன்னவர் நீங்கள் தானே ஐயா. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு மாணவ மாணவிகளின் மனநிலையை புரிந்து கொள்வது மிகவும் கடினமான காரியம். ஆனால், அதையும் நீங்கள் திறம்பட செய்தீர்களே. உங்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!