Teachers Day 2024 : செப். 5 ஆசிரியர் தினமாக கொண்டாடுவது ஏன்?

Teachers Day 2024 : நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். இது ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

teachers day 2024 know why is teachers day celebrated on 5th september in tamil mks

மாதா, பிதா, குரு என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் குரு என்பது நமக்கு கல்வியை கற்பிக்கும் ஆசிரியர். இதுதவிர, ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல விஷயங்களையும் நமக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்து, ஒரு உண்மையான வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தினமும் நன்றி சொன்னால் கூட போதாது. 

ஆசிரியர் பணி என்பது ஒரு சாதாரண பணி அல்ல. ஆசிரியர்கள் கல்வி மட்டுமல்ல, அதையும் தாண்டி வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தர வேண்டும். இந்த பணிக்கு தன்னலமற்ற தியாகம் மனப்பான்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இந்த பணியை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். இஇந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:  ஆசிரியர்கள் யார்..? இந்தளவு நாம் போற்றி புகழ காரணம் என்ன..? சிலிர்க்க வைக்கும் சில உதாரணங்கள்..

ஆசிரியர் தினம் எப்படி வந்தது?:

ஆசிரியர் பணியை புனிதப் பணியாக கருதி, மற்ற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக இருந்தவர்தான் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். மாபெரும் தத்துவ மேதையாக விளங்கிய இவரை, கௌரவப்படுத்தும் விதமாக தான் இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இந்த ஆசிரியர் தினமானது 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:  கலையிழந்த நூற்றாண்டு கால பள்ளியை தத்தெடுத்து ரூ.50 லட்சத்தில் கலர்புல்லாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:

1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகே இவர் பிறந்தார். கல்வியே முதன்மை என்ற எண்ணம் கொண்ட இவர், பி.ஏ.. எம்.ஏ பட்டம் பெற்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி  விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். பிறகு 1923 ஆம் ஆண்டு இந்திய தத்துவம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் அவர் தனது மகத்தான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

மேலும் இவர் 1931 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1939ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1946 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தூதுவராகவும் இருந்தார். நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு இவர் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். இறுதியாக இவர் 1962 முதல் 196 7 வரை நம்முடைய நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராக இருந்தார்.

ஆசிரியர் தினம் கொண்டாட்டம் :

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, இது மாணவர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான நாள் தான். ஏனெனில், இந்நாளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை கொடுப்பார்கள். மேலும், இந்நாளில் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முக்கியமாக, மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று,சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கு விதமாக விருதுகள் வழங்குவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios