Hrithik Roshan: அட்ராசக்க... ஹிருத்திக் ரோஷன் 50-வது பிறந்தநாளுக்கு... தமிழக ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!
ஹிருத்திக் ரோஷனின் 50வது பிறந்தநாளை, தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், தமிழக ரசிகர்கள் பலருக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.