MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சத்குரு ஆட்டத்துக்கு இவ்வளவு பவரா? சிவராத்திரி கொண்டாட்டத்தில் திகைத்து போன தமன்னா!

சத்குரு ஆட்டத்துக்கு இவ்வளவு பவரா? சிவராத்திரி கொண்டாட்டத்தில் திகைத்து போன தமன்னா!

ஈஷா யோகா மையத்தில் விடிய விடிய நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில்.. சத்குருவின் ஆட்டத்தை பார்த்து நடிகை தமன்னா திகைத்து விட்டதாக கூறப்படுகிறது. 

2 Min read
manimegalai a
Published : Mar 09 2024, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிவபெருமானுக்கு உகந்த நாட்கள் எத்தனையோ இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபெருமானை பிரார்த்தனை செய்தால்... அவர்களின் வாழ்க்கையிலும், குடும்பத்திலும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே போல் விரதம் இருப்பவரின் பாவம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
 

25

சிவராத்திரி அன்று சிவாலயங்களில் விடிய விடிய பூஜைகள் நடத்தப்படும். அதே போல் கண் விழிக்கும் பலர் சிவாலயங்களுக்கு வந்து சிவனின் நாமத்தை சொல்லி கொண்டும், தாயம் விளையாடியும் பொழுதை கழிப்பர். 

ரமணா பட பாணியில்.. தனியார் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள்! சத்யராஜ் மகள் திவ்யா கூறிய ஷாக்கிங் தகவல்!
 

35

இதே போல் சிவராத்திரி நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்,  ஈஷா யோகா மையத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
 

45
Sadhguru, Ram Mandir

Sadhguru, Ram Mandir

குறிப்பாக நடிகை தமன்னா, கடந்த நான்கு வருடங்களாகவே தொடர்ந்து ஈஷா மையத்தில் கொண்டாடப்படும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று மாலை 6:00 மணிக்கு ஈஷா மையத்தில் துவங்கிய சிவராத்திரி கொண்டாட்டம் விடிய விடிய காலை 6 மணி வரை நடந்தது. இந்த பூஜைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்தே ஏற்பாடுகள் துவங்கிய நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்தனர்.

உங்களுக்கு 45 வயசுனா யார் நம்புவா? கருப்பு நிற மாடர்ன் உடையில்.. 20 வயசு இளம் நடிகை போல் இருக்கும் ஜோதிகா!
 

55

மேலும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் ஈஷா மையத்தில், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி நடந்த போது, அவர் பக்தி பாடலை பாடும் போது...  திடீரென சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுந்து ஆட துவங்கிவிட்டார். இவர் ஆட்டத்தை கண்டதும் அங்கிருந்து அனைவரும் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா, என விண்ணை முட்டும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர். மேலும் நடிகை தமன்னா, சத்குருவின் ஆட்டத்துக்கு இவ்வளவு பவரா என  சிலாகித்து பார்த்துள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சத்குரு
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved