MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உங்களுக்கு 45 வயசுனா யார் நம்புவா? கருப்பு நிற மாடர்ன் உடையில்.. 20 வயசு இளம் நடிகை போல் இருக்கும் ஜோதிகா!

உங்களுக்கு 45 வயசுனா யார் நம்புவா? கருப்பு நிற மாடர்ன் உடையில்.. 20 வயசு இளம் நடிகை போல் இருக்கும் ஜோதிகா!

நடிகை ஜோதிகா, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில், தற்போது கருப்பு நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 09 2024, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழில் 'வாலி' திரைப்படத்தில், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை ஹிந்தி படத்தால் மிஸ் செய்தாலும்... எஸ்.ஜே சூர்யா கேட்டுக்கொண்டதால், 'வாலி'படத்தில் கேமியா ரோலில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்னுடைய அழகால் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஜோதிகா. இதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார், அஜித்துக்கு ஜோடியாக முகவரி, விஜய்க்கு ஜோடியாக குஷி, அர்ஜுனுக்கு ஜோடியாக ரிதம், கமல்ஹாசனுக்கு ஜோடியாக தெனாலி என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து, மிக குறுகிய காலத்தில் ... முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

25

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டு, தன்னுடைய கேரியரில் படு பிசியாக இருந்த போது... நடிகர் சூர்யா மீது காதல் வயப்பட்டார் ஜோ. அவ்வப்போது இவர்களின் காதல் விவகாரம் தொடர்ந்து செய்தி தாள்களில் வெளிவந்தாலும், இருவருமே தொடர்ந்து மௌனம் காத்து வந்தனர். நடிகர் சூர்யா, ஜோதிகாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருந்த போது, அவரின் காதலுக்கு எதிராக நின்றவர் பழம்பெரும் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் தான்.

Kalki 2898 AD Update: 'கல்கி 2898 AD' படத்தில் பைரவாவாக மிரட்ட வரும் பிரபாஸ்! புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

35

சூர்யா தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாததால், சிவகுமார் அவரின் முடிவை மாற்றிக்கொண்டு ஜோ - சூர்யா திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக ஒதுங்கிய ஜோதிகா, 8 வருடங்கள் தன்னுடைய குடும்பத்தையும், குழந்தைகளையம் பொறுப்பாக கவனித்து வந்தார்.

45

இதை தொடர்ந்து, கணவர் சூர்யாவின் சம்மதத்துடன் 2015-ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படம் ஜோதிகாவுக்கு தரமான கம் பேக் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து... கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும், வலுவான கதாப்பாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக இவர் நடித்த காதல் தி கோர் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற நிலையில், தற்போது பாலிவுட்டில் நேற்று வெளியான ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் ஜோதிகாவில் கேரக்டர் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Breaking: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அஜித்! நிம்மதியடைந்த ரசிகர்கள்!

55

மீண்டும் நடிக்க துவங்கிய பின்னர் ஃபிட்னஸிலும் கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஜோ... 45 வயதில் கூட 20 வயசு இளம் ஹீரோயின் போல் இருக்கிறார். மேலும் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில், கலக்கலாக இவர் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Santhanam Cry: ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழா! தியானத்தில் மனம் உருகி அழுத நடிகர் சந்தானம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved