MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Santhanam Cry: ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழா! தியானத்தில் மனம் உருகி அழுத நடிகர் சந்தானம்!

Santhanam Cry: ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழா! தியானத்தில் மனம் உருகி அழுத நடிகர் சந்தானம்!

பிரபல நடிகர் சந்தானம், ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில், மனம் உருகி அழுது தியானம் மேற்கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

1 Min read
manimegalai a
Published : Mar 09 2024, 09:32 AM IST| Updated : Mar 09 2024, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
maha sivarathiri

maha sivarathiri

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி விழா, சிவபத்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிவபக்தர்கள் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ கண் விழித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். மேலும் கோயில்கள் சிவ ராத்திரி அன்று நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

24
isha yoga

isha yoga

அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள், அரசியல்வாதிகள், விஐபிகள், வி விஐபிகள், பொதுமக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரா சேனா ரெட்டி, தமிழக இணை அமைச்சர் எல்.முருகன், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Female Oriented Movies: பெண்களை போகப்பொருளாக ஆக்காமல் உயர்வாக சித்தரித்த டாப் 5 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

34

ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடத்த, இதில் நடிகை தமன்னா, நடிகர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிவனை மனம் உருகி வேண்டிக்கொண்டனர். அந்த வகையில் பிரம்ம முகுர்த்தத்தில் நடந்த தியானத்தில், நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டுகொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

44

ஏற்கனவே, கோவில் அடிமை தனத்தை நிறுத்த வேண்டும் என கூறி, கடந்த 2021 -ஆம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சற்குரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதே போல், இதுகுறித்து சந்தானம் எடுத்த பேட்டியில் சற்குரு கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. சற்குருவை தீவிரமாக பின் பற்றி வரும் சந்தானம் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டான் தபால் நிலையத்தில்.. மாளவிகா மோகனன் தங்கலான் கெட்டப்பில் இருக்கும் ஸ்டாம்ப்! வைரலாகும் புகைப்படம்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சத்குரு
சந்தானம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved