மீண்டும் முத்துவேல் பாண்டியன் பராக்.. பராக்..! 'ஜெயிலர் 2' படத்தை கன்ஃபாம் செய்த பிரபலம்! குஷியான ரசிகர்கள்!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதை பிரபல நடிகை உறுதி செய்துள்ள நிலையில், இந்த தகவல் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
'பீஸ்ட்' படத்தின் தோல்விக்கு பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற IPS அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் வசந்த் ரவி, மிர்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், சுனில், தமன்னா, விநாயகன், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அதே போல் கேமியோ ரோலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், தெலுங்கு ஸ்டார் நாகா பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, சூப்பர்... டூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டும் இன்றி வசூலிலும் கெத்து காட்டியது.
சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததால், இப்படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம்... ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார், மற்றும் இசையமையாளர் அனிருத் ஆகியோர்க்கு கார் மற்றும் பணத்தை பரிசாக கொடுத்த நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனைருக்கும் தங்க காசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் இப்படம் குறித்து, வெளியாகியுள்ள தகவல்... ரஜினிகாந்த் ரசிகர்களை ரெட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக, இப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்ணா, 'பர்த் மார்க்' பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
தனுஷின் 'ராயன்' படத்தில் பிக்பாஸ் பிரபலம்! மிரட்டலான லுக்கில் வெளியான புதிய போஸ்டர்!
ரஜினிகாந்த் தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை நடித்து முடித்த பின்னர் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அநேகமாக இப்படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கலாம் என கூறப்படுகிறது.