இனி நான் சிங்கிள் இல்லப்பா.. காதலரை கரம்பிடித்தார் பாடகி பிரியா ஜெர்ஸன் - கியூட் கிளிக்ஸ்!
Priya Jerson : கேரளாவில் பிறந்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடகி பிரியா ஜெர்சனுக்கு வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Priya jerson Friends
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்றால் அது மிகையல்ல. இன்று திரைத்துறையில் மின்னும் பல பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் அவர்களுக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்றே கூறலாம். இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அக்டோபர் ரேஸில் இருந்து விலகிய "கங்குவா" - சூர்யா தான் காரணமா? தயாரிப்பாளர் ஓபன் டாக்!
Singer Priya jerson
அந்த ஒன்பதாவது சீசனில், பக்தி பாடல்களை பாடி அசத்திய பிரபல பாடகி அருணா, Super Singer Season 9 பட்டத்தை வென்ற நிலையில், அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்து, முதல் ரன்னரப்பாக வெற்றி பெற்ற பாடகி தான் பிரியா ஜெர்ஸன். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Priya jerson Marriage
மேலைநாடுகளுக்கெல்லாம் சென்று இசை பற்றிய பிரத்தியேக பயிற்சி பெற்ற பாடகி பிரியா ஜெர்சன், கேரளாவில் தன்னோடு பழகிய நபரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவருடன் திருமண நிச்சயம் செய்து கொண்டார்.
Priya jerson Marriage Photos
இந்நிலையில் பிரியா ஜெர்சனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ப்ரியாவோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பயணித்த பலரும் அவரது திருமணத்தில் பங்கேற்று, தங்கள் தோழியை வாழ்த்தியுள்ளனர்.
ரைட்டு.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு - GOAT படத்தில் ஒரு ரீமிக்ஸ் சாங் - VP தந்த அப்டேட்!