Asianet News TamilAsianet News Tamil

ரைட்டு.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு - GOAT படத்தில் ஒரு ரீமிக்ஸ் சாங் - VP தந்த அப்டேட்!

GOAT Movie : கோட் படத்தின் நான்காவது சிங்கிள் இன்று மாலை வெளியாகி பெரிய அளவில் தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

GOAT Movie remix song director venkat prabhu opens up ans
Author
First Published Aug 31, 2024, 9:52 PM IST | Last Updated Aug 31, 2024, 9:51 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் நடிகை திரிஷா, தளபதி விஜயோடு இணைந்து நடனமாடியுள்ளதாக பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது.

இருப்பினும் இன்று வெளியான "மட்ட" பாடலின் ப்ரோமோவில், திரிஷா இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திரையரங்குகளில் இந்த பாடல் வெளியாகும்போது கட்டாயம் அதில் திரிஷாவின் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இன்று வெளியான "மட்ட" பாடலை எழுதியது பாடலாசிரியர் விவேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

"தளபதியின் கிளாசிக் மேனரிஸம்ஸ்" - GOAT நான்காம் சிங்கிளில் ஒளிந்திருக்கும் மாஸ் சம்பவம்!

ஏற்கனவே கோட் படத்தில் இருந்து நான்கு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, இப்படத்தில் உள்ள மேலும் இரண்டு பாடல்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் அனைவருக்கும் பிடித்த ரீமிக்ஸ் பாடல் ஒன்றும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் பிரேம்ஜி பல திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்களை பாடுவதில் வல்லவர். ஏற்கனவே தளபதி விஜயின் "திருப்பாச்சி" படத்தில் வரும் ஒரு பாடலில் கூட பிரேம்ஜி பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படத்திலும் ஏற்கனவே வெளியான விசில் போடு பாடலை, பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து ஒரு பாடலாக பாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார் வெங்கட் பிரபு. ஆகவே கோட் படத்தில் இருந்து மேலும் 2 பாடல்கள் வெளியாகவுள்ளது. 

"தலைவரின்" கூலி.. கேரக்டர்ஸின் பெயர்களை கவனிச்சீங்களா? ஒரு ஒற்றுமை இருக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios