Asianet News TamilAsianet News Tamil

"தளபதியின் கிளாசிக் மேனரிஸம்ஸ்" - GOAT நான்காம் சிங்கிளில் ஒளிந்திருக்கும் மாஸ் சம்பவம்!

GOAT 4th Single De-Coding : கோட் படத்தின் நான்காம் சிங்கிள் வெளியாகி இப்பொது தளபதியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

Thalapathy vijay classic Mannerisms hidden details of matta 4th single ans
Author
First Published Aug 31, 2024, 7:19 PM IST | Last Updated Aug 31, 2024, 7:19 PM IST

தளபதி விஜயின் "கோட்" திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும், அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் வகையில் அமைத்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, திரை உலகில் உச்சகட்ட புகழோடு விஜய் பயணித்து வரும் நிலையில், இந்த திரைப்படம் அவருக்கு பிரியா விடைகொடுக்கும் ஒரு திரைப்படமாக அமையவிருப்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக பார்த்து பார்த்து செய்து வருகிறோம் என்றார்.  

தயாரிப்பு தரப்பில் இருந்து, கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி அல்லது ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் தளபதியின் திரைப்படத்தை மிக நேர்த்தியாக அவருடைய ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும், திரையரங்குகளில் அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் இருக்க வேண்டும் என்பதற்காக, சில காலங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள தயாரிப்பு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, இப்போது செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றார் அவர். 

அப்போ த்ரிஷா இல்லையா? சோலோவாக அசத்தும் தளபதி - GOAT நான்காம் சிங்கிள் இதோ!

இந்நிலையில் ஏற்கனவே வெளியான அனைத்து சிங்கிள் பாடல்களிலும் சிறு சிறு விஷயங்களை இணைத்து சுவாரசியத்தை கூட்டிய வெங்கட் பிரபு, இந்த நான்காவது சிங்கிள் பாடலிலும் ஒரு முக்கியமான விஷயத்தை செய்திருக்கிறார். பல திரைப்படங்களில் தளபதி விஜய் தனக்கே உரித்தான சில கிளாசிக் மேனரிஸம்ஸ் செய்து அசத்தியிருப்பார். 

Thalapathy vijay classic Mannerisms hidden details of matta 4th single ansகுறிப்பாக "கில்லி" திரைப்படத்தில் கட்டைவிரலை சுழற்றுவது, "திருமலை" திரைப்படத்தில் சட்டையின் காலரை தட்டி விட்டு, அதிலிருந்து சிகரெட் எடுப்பது, "போக்கிரி" திரைப்படத்தில் துப்பாக்கியை அசாலிட்டாக சுட்டுக் கொண்டே செல்வது, "தலைவா" திரைப்படத்தில் இரு கைகளை மேலே உயர்த்தி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற மேனரிஸம்ஸ் அனைத்தையும், இந்த பாடலில் இணைத்து அசத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

முடிவுக்கு வந்த 38 ஆண்டு காத்திருப்பு.. ரஜினியின் கூலி - ராஜசேகராக கலக்கப்போகும் "உயர்ந்த மனிதன்"!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios