MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை இவங்க தான்.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை இவங்க தான்.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

Sun TV Serial Actress Salary : டிஆர்பி அடிப்படையில் முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Ramya s
Published : Jul 16 2024, 11:55 AM IST| Updated : Jul 16 2024, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sun TV Serial Actress Salary

Sun TV Serial Actress Salary

சினிமாக்களை மிஞ்சும் சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வயதானவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, தற்போது இளைய தலைமுறையினரும் அதிகமாக சீரியல்களை ரசித்து வருகின்றனர். தற்போதைய காலத்தில் பல சேனல்கள் பல்வேறு சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.

27
Ethirneechal and Kayal Actress Salary

Ethirneechal and Kayal Actress Salary

ஆனால் மற்ற சேனல்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சீரியல் என்றாலே அது சன் டிவி சீரியல் தான் என்ற நிலையே தற்போதும் நீடித்து வருகிறது. எனவே டிஆர்பி அடிப்படையில் முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

37
Madhumitha Ethirneechal Salary Details

Madhumitha Ethirneechal Salary Details

மதுமிதா

பலரின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற மதுமிதாவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என்று கூறப்படுகிறது.

47
Chaitra Reddy Kayal Salary Details

Chaitra Reddy Kayal Salary Details

சைத்ரா ரெட்டி

சின்னத்திரையில் நெகட்டிவ் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்த சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் கயல் சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ளார். கயல் என்ற கேரக்டர் மூலம் தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருகிறார். சைத்ரா ரெட்டி என்ற பெயரே மறந்து போகும் அளவுக்கு ரசிகர்கள் கயலை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சைத்ரா ரெட்டியின் ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 ஆகும்.

57
Gabriella Cellus Sundari Salary Details

Gabriella Cellus Sundari Salary Details

கேப்ரியல்லா செல்லஸ்:

டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுந்தரி கேரக்டர் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.12,000 ஆகும்.

67
c

c

ஆல்யா மானசா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி  சீரியலில்  நடித்தன் மூலம் அனைவரையும் கவர்ந்த ஆல்யா மானசா, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் லீட் ரோலில் ஆலியா நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளம் வாங்குகிறாராம்.

77
Sruthi Raj

Sruthi Raj

ஸ்ருதி ராஜ்

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். பின்னர் ஆபிஸ், அழகு, தாலாட்டு போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஸ்ருதி ராஜ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அவர் ஒரு நாளைக்கு ரூ.40,000 சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved