- Home
- Gallery
- Sreenidhi: சிம்புவின் லவ் டார்ச்சர் தாங்க முடியல.? ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு பகீர் கிளப்பும் நடிகை ஸ்ரீநிதி..!
Sreenidhi: சிம்புவின் லவ் டார்ச்சர் தாங்க முடியல.? ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு பகீர் கிளப்பும் நடிகை ஸ்ரீநிதி..!
Simbu gives me love torture says Actress Sreenidhi: சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாக இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

sreenidhi
சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது இணையத்தில் வைரலாக மாறிவிடும். இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர்.
sreenidhi
அதன்படி, சமீப காலமாக பல்வேறு சர்சைகளின் சிக்கி வருபவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி, விஜய் டிவியில் 7சி சீரியலின் மூலம் அறிமுகமாகி, பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி.
sreenidhi
முன்னதாக 'வலிமை' படம் தொடர்பாக இவர் பகிர்ந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக வலைத்தள பக்கங்களில் கண்டமேனிக்கி திட்டி தீர்த்தனர். முன்னதாக ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
sreenidhi
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் ஸ்ரீநிதி.
sreenidhi post
ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் எழுந்தது. இதனை பார்த்த அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்னை லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன ஏன் டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல வில்லை’ அப்பா என்று பதில் அனுப்பி ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த செய்தி காட்டு தீ போல் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.