MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sivakarthikeyan: கமர்ஷியல் மட்டும் போதுமா..? தோல்விகளுக்கு காரணம் கண்டறிந்த... ஹிட் நாயகன் சிவகார்த்திகேயன்...

Sivakarthikeyan: கமர்ஷியல் மட்டும் போதுமா..? தோல்விகளுக்கு காரணம் கண்டறிந்த... ஹிட் நாயகன் சிவகார்த்திகேயன்...

Sivakarthikeyan: தன்னுடைய சில படங்களின் கதை கருவிலேயே பிரச்சனை இருந்ததாக பிளாக் பஸ்டர் படங்களின் ஹிட் நாயகன் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

2 Min read
Author : Anija Kannan
Published : May 21 2022, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
sivakarthikeyan

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பி வருகிறது. அதிலும் சென்டிமென்ட் காட்சிகள்  மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
sivakarthikeyan

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படம் மே 13ம் தேதி வெளியாகியுள்ளது.

38
sivakarthikeyan

sivakarthikeyan

இந்த படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

48
sivakarthikeyan

sivakarthikeyan

இந்த படத்தை, லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. மேலும், இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். 

58
Sivakarthikeyan

Sivakarthikeyan

இந்த திரைப்படம் பாஸிட்டிவான விமர்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்துள்ள நிலையில், டான் படம் அந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

68
Sivakarthikeyan

Sivakarthikeyan

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால், நடிகர் சிவகார்த்திகேயன் பிளாக் பஸ்டர் படங்களின் ஹிட் நாயகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். 

78

இந்நிலையில், டான் படம் வெற்றிக்கு பின் சமீபத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சில படங்களின் கதை கருவிலேயே பிரச்சனை வந்ததாக  சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

88
sivakarthikeyan

sivakarthikeyan

மேலும் அவர், ''ஆரம்பத்தில் என்னுடைய படங்கள் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பின் சில படங்கள் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் என்ன என்று யோசித்த போது, கமர்ஷியல் மட்டும் மக்களுக்கு போதாது, வித்தியாசமான கதை கொடுக்க வேண்டும் என்று தெரிய வந்தது. அதை தான் இப்போது கொடுக்க முயற்சித்து வருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
 மேலும் படிக்க...என்ன நடந்தாலும்...இதை மட்டும் விடவே மாட்டேன்...இந்த விஷயத்தில் உறுதியாய் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved