வீட்டில் பணத்தை ஈர்க்க.. செல்வம் செழிப்பு பெருக.. சிம்பிள் வாஸ்து டிப்ஸ்!!
Vastu TipsFor Money : வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணம், மகிழ்ச்சி செழிப்பு ஆகியவற்றை ஈர்ப்பதற்கான வழிகளைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.
பணம் இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இதற்காக நாம் ராப்பகலாக உழைக்கிறோம். ஆனால், எந்த எந்தவித பயனும் இல்லாமல் நீங்கள் நிதி நெருக்கடியால் சிரமப்படுகிறீர்கள் என்றால், அல்லது அதிக கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
ஆம், வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும், பணத்தை ஈர்ப்பதற்கான அனைத்து வழிகளும் உங்களுக்காகத் திறக்கப்படும். அது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
மணி பிளான்ட் : வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடியை வீட்டில் வைத்தால் பணம் மற்றும் செழிப்பை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, உங்களுக்கு பண தேவை என்றால் உடனே இந்த செடியை வீட்டில் வாங்கி வையுங்கள்.
இதையும் படிங்க:
தூபக்குச்சிகள் : வாஸ்துப்படி, தூபக் குச்சிகள் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் செழிப்பை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, உங்கள் வீட்டிற்கு பணம் செழிப்பு தேவை என்றால், தினமும் காலை மாலை என இருவேளையும் தூபகுச்சிகள் ஏற்றுங்கள்.
வீட்டின் நுழைவாயில் : ஒரு வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை வீட்டின் நுழைவாயில் இருந்து தான் வருகிறது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. எனவே, உங்கள் வீட்டில் நுழைவாயில் சுத்தமாகவும், வீட்டிற்கு வருவோரை மகிழ்விப்பதாகவும் இருந்தால், நீங்கள் எதிர்பார்க்காத பலன்களை பெறுவீர்கள்.
இதையும் படிங்க: கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!
நீர் கசிவது : உங்கள் வீட்டில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்பட்டால் உடனே அதை சரி செய்யுங்கள். இல்லையெனில், உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிகள் தடுக்கப்படும் மற்றும் பணம் வராது.
செப்பு ஸ்வஸ்திகா : வாஸ்து சாஸ்திரம் படி, உங்கள் வீட்டில் காப்பர் சுவஸ்திகா இருந்தால் அது உங்கள் வீட்டிற்கு பணம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும் என்று சொல்கிறது.