200 கோடியில் அரண்மனை போல் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழும் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் சொத்து மதிப்பு இவ்வளவா?
58-வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு மற்றும் அவர் செய்யும் தொழில்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Shah Rukh khan
பாலிவுட் திரையுலகில் ரொமாண்டிக் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் நாளடைவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் ஷாருக்கான். இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கும் இவர் தான். ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பதான் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.
Shah Rukh khan Birthday
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தை கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார். ஷாருக்கானின் ரசிகர்களுக்கு பிடித்தவாரு அவரை இரட்டை வேடத்தில் செம்ம மாஸாக நடிக்க வைத்து வெற்றிகண்டுள்ளார் அட்லீ. ஜவான் திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது.
Shah Rukh khan age
இந்த நிலையில், இந்த வருடம் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகி விட்டார் ஷாருக்கான். அவர் நடித்துள்ள டுங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் இதுவரை ஒன்றுகூட பிளாப் ஆனதில்லை. அதனால் டுங்கி படமும் நிச்சயம் வெற்றிபெறும் என்கிற முனைப்பில் உள்ளார் ஷாருக். இப்படம் ஹிட்டானால் ஒரே ஆண்டில் மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார் ஷாருக்கான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Shah Rukh khan salary
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இதனிடையே அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். நடிகர் ஷாருக்கான் உலகளவில் அதிகப்படியான சொத்துக்களை கொண்ட நடிகர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாம்.
Shah Rukh khan assets
படங்களின் மூலம் தான் இவருக்கு பெரும்பாலான வருமானம் வந்துள்ளது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் நடிப்பதை தாண்டி ரெட் சில்லீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனைவியுடன் சேர்ந்து ஷாருக்கான் நடத்தி வரும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கோடி கோடியாய் வருமானமும் ஈட்டி வருகிறார். அண்மையில் வெளியாகி ஆயிரம் கோடி வசூலை அள்ளிய ஜவான் படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.
Shah Rukh khan net worth
நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமாக மும்பையில் ஒரு அரண்மனை போன்ற பங்களா உள்ளது. இந்த வீட்டை ரூ.200 கோடி மதிப்பில் கட்டி இருக்கிறார் ஷாருக். இதுதவிர துபாயில் உள்ள பால்ம் ஜுமைரா தீவிலும் ஒரு பங்களா உள்ளது. மேலும் லண்டனிலும் ஒரு ஆடம்பர வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறார் ஷாருக்கான்.
Shah Rukh khan car collection
இதுதவிர ஐபிஎல்லில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்கிற அணியின் உரிமையாளராகவும் உள்ளார். ஷாருக்கானிடம் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரோல்ஸ் ராய்ஸ் குல்லினின், பெண்ட்லி காண்டினெண்டல் ஜிடி, புகாட்டி வெய்ரான், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ ஐ8, டொயோட்டா லேண்ட் குரூஸர் என எக்கச்சக்கமான சொகுசு கார்களும் உள்ளன.
இதையும் படியுங்கள்...அதே டெய்லரா?... நயன்தாராவின் திருமண சேலையை லியோ சக்சஸ் மீட்டுக்கு அணிந்து வந்த திரிஷா - வைரலாகும் போட்டோஸ்