அதே டெய்லரா?... நயன்தாராவின் திருமண சேலையை லியோ சக்சஸ் மீட்டுக்கு அணிந்து வந்த திரிஷா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை திரிஷா லியோ பட சக்சஸ் மீட்டுக்கு அணிந்து வந்த சிகப்பு நிற சேலையில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Trisha
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக நீடித்து வருபவர் திரிஷா. இவருக்கு தற்போது வயது 40-ஐ நெருங்கிவிட்டாலும், இன்றளவும் 20 வயது பெண் போல் குறையாத அழகோடும் இளமையோடும் இருப்பதால் இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Trisha krishnan
திரிஷா நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. நடிகை திரிஷாவும் இதில் பங்கேற்று நடித்தார்.
Leo heroine Trisha
திரிஷா நடித்த லியோ படம் ரிலீஸ் ஆனதால் கடந்த அக்டோபர் 19-ந் தேதி அஜர்பைஜானில் இருந்து சென்னை கிளம்பி வந்த திரிஷா, ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் லியோ முதல் காட்சியை பார்த்து ரசித்தார். அப்படத்தில் நடிகர் விஜய்யின் பார்த்திபன் கேரக்டருக்கு ஜோடியாக சத்யா என்கிற ரோலில் நடித்திருந்தார் திரிஷா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Trisha in red saree
விஜய் திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி லியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருந்தது. இந்த நிலையில், அப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லியோ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
Trisha Leo success meet clicks
இதில் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டார். அந்த விழாவிற்கு சிகப்பு நிற சேலையில் ஸ்ட்ராபெரி பெண்ணாக வந்த திரிஷா, அந்த உடையில் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது அச்சு அசல் நயன்தாராவின் திருமண சேலையை போல் இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
Trisha viral photos
இந்த சக்சஸ் மீட்டில் பேசும்போது விஜய்யுடன் 5-வது முறையாக பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு மிகவும் பிடித்த நடிகரும், நண்பரும் விஜய் தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதுமட்டுமின்றி இப்படத்தில் தன்னை கொல்லாமல் இருந்த லோகேஷுக்கும் நன்றி தெரிவித்தார் திரிஷா.
இதையும் படியுங்கள்... VarunLav: இத்தாலியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம்! திருமண போட்டோஸ்!