என் கூட கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்.. இளம்பெண்ணை படுக்கை்கு கூப்பிட்ட விஓஏ பணியிடை நீக்கம்..!
விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட எஸ்.பி.க்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வி.ஏ.ஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள நல்லா பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கீதா (28). சங்கீதாவின் கணவர் கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து தனது 11 வயது மகன் கமலேஷ் உடன் சங்கீதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்கவும், மாதந்தோறும் விதவை உதவித் தொகை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர், அந்த பெண்ணிண் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு தினமும் தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்து ஆசைக்கு இணங்கும் படி கூறி வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சங்கீதா தன்னுடைய சகோதரர் சூர்யாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்த வேறு வழியின்றி கணவரின் இறப்பு சான்றிதழை வழங்கினார். அதன்பிறகு விதவை உதவித் தொகைக்கான சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பிறகு விதவை உதவித் தொகை வேண்டும் என்றால் என்னுடன் 5 நிமிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா மற்றும் அவரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டஎஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வி.ஏ.ஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜ்ஜை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.