நெஞ்சம் உடைந்து சிதறியது... இந்தியா தோற்றதால் குழந்தைகள் முன் கதறி அழுதேன் - செல்வராகவனின் கண்ணீர் பதிவு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த பின்னர் தான் கதறி அழுததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
selvaraghavan
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் லீக் சுற்றுகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதிபோட்டிக்கு முன்னேறின. இதில் முதல் அரையிறுதியில் இந்தியாவும், இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
Australia worldcup win
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்து 43-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி கோப்பையை தட்டிச்சென்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
India lost in WC Final
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாக இருந்து வந்த இந்தியா, இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த தோல்வியால் ரசிகர்கள் மட்டுமின்றி சிராஜ், ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களும் ஸ்டேடியத்திலேயே கண்கலங்கினர். இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனும் இந்தியா தோல்வி அடைந்ததால் தான் அழுததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
selvaraghavan X post
அந்த பதிவில், “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என இந்திய அணியின் தோல்வி குறித்து மனமுடைந்து பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.
இதையும் படியுங்கள்... மேலும் 3 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிரடியாக அறிவித்த பிக்பாஸ் - கம்பேக் கொடுக்க உள்ளாரா பிரதீப்?