MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Seeman : சீமான் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்... 2 மணிநேர சந்திப்பு; கன்பார்ம் ஆன கூட்டணி

Seeman : சீமான் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்... 2 மணிநேர சந்திப்பு; கன்பார்ம் ஆன கூட்டணி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், அவருடனான கூட்டணியை கன்பார்ம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 21 2024, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyan

Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.23 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

24
Sivakarthikeyan Movie Line Up

Sivakarthikeyan Movie Line Up

இதுதவிர அமரன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அமரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Pushpa 2 : "ராஷ்மிகா.. அல்லு மீது Case போடுவேன்.. கடுப்பான ரசிகர்.. ஏன்? கோவமா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமா?

34
venkat prabhu

venkat prabhu

இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் மேலும் இரண்டு படங்கள் உள்ளன. அதில் எஸ்.கே.24 திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். சிவாவின் எஸ்.கே.25 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இப்படி பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்துள்ளார்.

44
sivakarthikeyan meet seeman

sivakarthikeyan meet seeman

சீமானின் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்து பேசி இருக்கிறார் சிவா. இரண்டு மணிநேரம் இந்த சந்திப்பு நடந்ததாம். இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி வெங்கட் பிரபு இயக்க உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சீமானை அணுகினாராம் எஸ்.கே. அதற்கான பேச்சுவார்த்தை தான் அப்போது நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடித்து வரும் சீமான், அடுத்ததாக எஸ்.கே. உடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... Nayanthara : மனைவியின் கையில் மகன்கள்.. குடும்பத்தை கட்டியணைத்தபடி விக்கி - கண்ணுபட போகுதுனு கவலைப்படும் Fans!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved