MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சந்தானம் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வடக்குப்பட்டி ராமசாமி..!

சந்தானம் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வடக்குப்பட்டி ராமசாமி..!

சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற வடக்குப்பட்டி ராம்சாமி திரைப்படம் ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 12 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்தார். ஹீரோவாக அறிமுகமானதும் காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், ஒரு கட்டத்தில் இனிமே நடிச்சா ஹீரோ தான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சந்தானத்திற்கு ஹீரோவாக மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது தில்லுக்கு துட்டு தான். இதையடுத்து அவர் நடித்த தில்லுக்கு துட்டு 2 மற்றும் ஏ1 ஆகிய திரைப்படங்களும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்தன. தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் அவரின் மார்க்கெட்டும் மளமளவென சரிந்தது.

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு அடிபொலியான சீனை மிஸ் பண்ணிருக்காங்களே... மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் மறைத்த உண்மை

34

இதையெடுத்து வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு கடந்தாண்டு வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து கம்பேக் படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கதை தேர்வில் கவனம் செலுத்த தொடங்கிய சந்தானம், அடுத்ததாக தேர்வு செய்து நடித்த படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் வசூலை வாரிக்குவித்து வெற்றிபெற்றது.

44

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அப்படம் இன்று ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன்படி அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... எனக்கு எந்த சம்பந்தமும் இல்லப்பா.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ் தான்! மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved