- Home
- Gallery
- ஜானகிக்கு அதிர்ச்சி கொடுக்கும் மாயா.. உண்மையை கேட்டு உடைந்து போன ரகுராம் - சந்தியா ராகம் சீரியல் ட்விஸ்ட்
ஜானகிக்கு அதிர்ச்சி கொடுக்கும் மாயா.. உண்மையை கேட்டு உடைந்து போன ரகுராம் - சந்தியா ராகம் சீரியல் ட்விஸ்ட்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி சந்தியாவின் குழந்தைக்கு மாயா என்று பெயர் சூட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

sandhya ragam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி சந்தியாவின் குழந்தைக்கு மாயா என்று பெயர் சூட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா.. அந்த குழந்தையே நான் தான் என்று சொல்ல, ஜானகி ஷாக்காகி நீ தானா அந்த குழந்தை என்று கண் கலங்குகிறாள்.
Zee Tamil sandhya ragam Serial
அடுத்ததாக மாயா இதையெல்லாம் அம்மா அவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க, என் அக்கா ஜானகி உனக்கு பெரியம்மா இல்ல அவங்க தான் எல்லாமேனு சொன்னாங்க என்று சொல்ல, ஜானகி என் தங்கச்சி என்னை பத்தி இவ்வளவு சொல்லி இருக்காளா? என்று கண் கலங்குகிறாள்.
இதனையடுத்து மாயா சொல்லுங்க பெரியம்மா உங்களுக்கு என்ன சத்தியம் பண்ணனும் என்று கேட்டு கையை நீட்ட, ஜானகி எனக்கு நீ எந்த சத்தியமும் பண்ண வேண்டாம் என்று ஜானகி கையை எடுத்து கொள்கிறாள். அடுத்து ரகுராம் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் பூஜையறையில் உட்கார்ந்திருக்க, ஜானகி என்னங்க ஆச்சு என்று கேட்க, அவர் ஓடி போன பெண்ணின் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறார்.
இதையும் படியுங்கள்... Sridevi Vijayakumar: தனுஷை தெரு தெருவா அலையவிட்ட தேவதையா இது.. ஸ்ரீதேவி விஜயகுமாரின் செம்ம கியூட் போட்டோஸ் இதோ
sandhya ragam Serial Update
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல என்று கலங்குகிறார். அந்த பொண்ணு ஓடி போனதுமே அவங்க அப்பா செத்து போய்ட்டாங்க என்று சொல்லி கவலைப்படுகிறார். இதனை தொடர்ந்து நம்ம வீட்டுலயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கு, இனிமே அது போல் எப்பவும் நடக்க கூடாது என்று சொல்ல, ஜானகி தனது கல்யாணத்தை நினைத்து பார்க்கிறாள், சந்தியா கிஷோரை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதும் அவரை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைந்து சந்தியாவை திட்ட, என் தங்கச்சியை திட்டாதீங்க என்று சொல்லியதை நினைத்து பார்க்கிறாள்.
sandhya ragam Serial Today Episode
அடுத்து ரகுராம் தனது கழுத்தில் தாலி காட்டியதை நினைத்து பார்க்கும் ஜானகி, முதலிரவு அறையில் மாமா சொன்னதால் தான் தாலி காட்டினேன். மற்றபடி உன் மேல எனக்கு எந்தவொரு ஈர்ப்பும் இல்ல, போக போக என்னை மாத்திக்கறேன் என்று சொல்லி முதலிரவை தள்ளி போட்டதும் பிறகு ஜானகி ஒரு பொறுப்பான மனைவியாக நடந்து கொள்ள தொடங்கியதும் ரகுராம் இந்த குடும்பத்தோட கவுரவம் தான் எனக்கு முக்கியம். அது கெட்டு போகாமல் நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்லியதையெல்லாம் நினைத்து பார்க்கிறாள். இப்படியான நிலையில அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... அதள பாதாளத்தில் சன் டிவி சீரியல்கள்; சில்லுசில்லுனு முன்னேறிய விஜய் டிவி தொடர்கள்! டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ