- Home
- Gallery
- Sridevi Vijayakumar: தனுஷை தெரு தெருவா அலையவிட்ட தேவதையா இது.. ஸ்ரீதேவி விஜயகுமாரின் செம்ம கியூட் போட்டோஸ் இதோ
Sridevi Vijayakumar: தனுஷை தெரு தெருவா அலையவிட்ட தேவதையா இது.. ஸ்ரீதேவி விஜயகுமாரின் செம்ம கியூட் போட்டோஸ் இதோ
தனுஷுக்கு ஜோடியாக தேவதையை கண்டேன் படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

sridevi vijayakumar
நடிகர் விஜயகுமாரின் வீட்டில் கடைக்குட்டி என்றால் அது ஸ்ரீதேவி தான். விஜயகுமார் - மஞ்சுளா ஜோடியின் கடைசி மகளான ஸ்ரீதேவி, தன் அக்காக்கள் வனிதா, ப்ரீத்தாவை போல் சின்ன வயசில் இருந்தே சினிமாவில் நடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் ரிக்ஷா மாமா.
Actress sridevi vijayakumar
ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, அதன்பின்னர் கடந்த 2002-ல் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் வைரஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகை ஷாலினி அஜித்குமாரின் சகோதரர் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி விஜயகுமார்.
sridevi vijayakumar Photos
பின்னர் மாதவன் உடன் பிரியமான தோழி, ஜீவா ஜோடியாக தித்திக்குதே போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி, தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். இதனால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஸ்ரீதேவிக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர்.
vijayakumar Daughter sridevi
நடிகை ஸ்ரீதேவிக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த படம் என்றால் அது தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த தேவதையைக் கண்டேன் திரைப்படம் தான். கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் உமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி விஜயகுமார்.
இதையும் படியுங்கள்... அதள பாதாளத்தில் சன் டிவி சீரியல்கள்; சில்லுசில்லுனு முன்னேறிய விஜய் டிவி தொடர்கள்! டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ
sridevi vijayakumar Instagram
இப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக மாமா பையா என்கிற பாடலில் நடிகர் தனுஷின் காதலை ஏற்காமல், அவரை தெரு தெருவா அலையுரேண்டி என பாட வைத்திருப்பார் ஸ்ரீதேவி. இப்படத்திற்கு பின்னர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதேவி, அப்படத்துக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை.
sridevi vijayakumar cute photos
கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன ஸ்ரீதேவிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சினிமா பக்கம் தலைகாட்டாவிட்டாலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ஸ்ரீதேவி.
sridevi vijayakumar Latest photos
அதுமட்டுமின்றி இன்ஸ்டாவிலும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால் நடிகை ஸ்ரீதேவிக்கு 9 லட்சத்துக்கும் மேல் பாலோவர்களும் உள்ளனர். அவர்களை கவரும் வகையில் தற்போது ஷார்ட் ஸ்கர்ட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஸ்ரீதேவி.
sridevi vijayakumar vacation Photos
தற்போது குடும்பத்துடன் போலந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அங்கு ஷார்ட் ஸ்கர்ட்டில் ஹாட் அண்ட் கியூட்டாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... HipHop Adhi : தியேட்டருக்கு வரும் மனநிலை குறைந்துள்ளது... ஓடிடி சரியா? தவறா? - ஹிப்ஹாப் ஆதி சொன்ன நச் பதில்