MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சந்தியா ராகம் சீரியல் : உனக்கு இந்த வீட்ல இடமில்ல; காதல் கல்யாணம் செய்ய நினைத்த மாயாவுக்கு ரகுராம் வைத்த செக்

சந்தியா ராகம் சீரியல் : உனக்கு இந்த வீட்ல இடமில்ல; காதல் கல்யாணம் செய்ய நினைத்த மாயாவுக்கு ரகுராம் வைத்த செக்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் காதல் திருமணத்திற்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 11 2024, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sandhya ragam Serial

sandhya ragam Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிஷோர் மாயாவின் காதல் குறித்து சொல்லி கல்யாணம் செய்து வைக்க போவதாக பேச ரகுராம் காதல் திருமணத்திற்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
Zee Tamil sandhya ragam Serial

Zee Tamil sandhya ragam Serial

அதாவது, ரகுராம் மாயாவை சந்தித்து நீ காதல் கல்யாணம் பண்ணிட்டு தாராளமா வாழலாம். ஆனால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்ல, இந்த விஷயத்தில் உனக்கு ஆதரவா என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். உன்னையும் இந்த வீட்டு பொண்ணா தான் நினைச்சேன். அதை நீயும் நிரூபித்து காட்டி இருக்க. ஆனால் காதல் கல்யாணம் பண்ணா சந்தியா மாதிரி நீயும் வீட்டை விட்டு வெளியே தான் போகணும் என்று சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... சீமான் கையால் விருது வாங்கிவிட்டு... அவரேயே மேடையில் அசிங்கப்படுத்தினாரா ஆவுடையப்பன்? தெரிய வந்த உண்மை!

34
sandhya ragam Serial Update

sandhya ragam Serial Update

இதை ஒட்டு கேட்டு விடும் ஷாரு அப்பா லிங்கத்திடம் ஒரு விக்கெட் அவுட்.. மாயா இந்த வீட்டை விட்டு வெளியே போக போறா, அதனால் ரகுராமை ஈஸியா போட்டு தள்ளிடலாம் என்று சொல்லி சந்தோசப்படுகிறாள். இதனை தொடர்ந்து மாயா காதலிக்கிற பையன் சீனுவா இருக்குமோ என்று சந்தேகப்படுகிறாள். வீட்டில் உள்ள மணிவண்ணன் உட்பட எல்லாரையும் ஏற்றி விட்டு கிஷோரிடம் பேச அனுப்புகிறார்.

44
sandhya ragam Serial Today Episode

sandhya ragam Serial Today Episode

கிஷோர் இவர்களை புரிந்து கொள்ள சீனுவை தான் மாயா காதலிக்கிறா என்ற உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். அதன் பிறகு மாயாவை கோவிலுக்கு அழைத்து சென்று  உனக்கும் சீனுவுக்கும் கல்யாணம் என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படியுங்கள்... நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர் அடித்துக் கொலை... பிரபல நடிகர் அதிரடி கைது - அதிர்ச்சியில் திரையுலகம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved