MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் கும்மாங் குத்து வாங்கிய குஷி - 2ம் நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் கும்மாங் குத்து வாங்கிய குஷி - 2ம் நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த குஷி திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 03 2023, 10:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Devarakonda, samantha

Vijay Devarakonda, samantha

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த லிகர் என்கிற திரைப்படம் பான் இந்தியா அளவில் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் குஷி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அவரும் சாகுந்தலம் என்கிற அட்டர் பிளாப் படத்தை கொடுத்ததால், இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Kushi movie

Kushi movie

குஷி திரைப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இது கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடியே இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்குமே தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காசும் கொடுக்கல.. காரும் கொடுக்கல; ஜெயிலர் பட ஆட்டநாயகன் அனிருத்தை அம்போனு விட்ட கலாநிதி - கடுப்பில் ரசிகர்கள்

34
Kushi box office collection

Kushi box office collection

வழக்கமாக ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அதன் வசூல் தான். அந்த வகையில் குஷி திரைப்படம் முதல் நாளில் ரூ.30.1 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் அதன் வசூல் சற்று சரிவை சந்தித்து உள்ளது. அதன்படி இரண்டாம் நாளில் குஷி திரைப்படம் ரூ.20 கோடி மட்டுமே வசூல் ஈட்டி உள்ளது. நேற்று விடுமுறை தினமாக இருந்தும் வசூல் கம்மி ஆகி உள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

44
Kushi box office report

Kushi box office report

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் இன்று பிக் அப் ஆகிவிடும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது. குஷி திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தாலும், இப்படத்திற்கு பிற மொழிகளில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் வசூலில் பலத்த அடி வாங்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பதுங்கிய பிரபாஸ்... பாய ரெடியான ஜெயம் ரவி! ரிலீஸ் தேதி உடன் வந்த ‘இறைவன்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved