இஞ்சி இடுப்பழகியாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார்... சேலையில் நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ
கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் செம்ம ஹாட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
sridevi vijayakumar
நடிகர் விஜயகுமாரின் இளைய மகள் ஸ்ரீதேவி. வனிதா மற்றும் பிரீத்தா ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர். சிறுவயதில் இருந்த நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த நடிகை ஸ்ரீதேவியை ரிக்ஷா மாமா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார் விஜயகுமார். இதையடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி 2002-ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
vijayakumar daughter Sridevi
அதுவும் முதல் படமே பாகுபலி நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் வெளிவந்த ஈஸ்வர் என்கிற திரைப்படம் ஸ்ரீதேவியின் முதல் படம். இதையடுத்த அந்த ஆண்டே தமிழிலும் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி, இங்கு நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்டுக்கு ஜோடியாக காதல் வைரஸ் என்கிற படத்தில் நடித்தார்.
Actress sridevi vijayakumar
நடிகை ஸ்ரீதேவிக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது பிரியமான தோழி தான். கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் மாதவனின் தோழியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதையடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த தித்திக்குதே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்... அருண் விஜய் அக்காவா இது! 50 வயதானாலும் அழகில் மகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்
Vanitha sister sridevi vijayakumar
பின்னர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த ஸ்ரீதேவி, தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் தேவதையை கண்டேன். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இதையடுத்து ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் நடித்த அவர் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
sridevi vijayakumar photos
ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சினிமாவை விட்டு விலகினாலும், இன்னும் அதே அழகுடன் இருக்கும் நடிகை ஸ்ரீதேவி தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுத்து வருகிறார்.
sridevi vijayakumar in saree
விரைவில் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நடிகை ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
sridevi vijayakumar photoshoot
அந்த வகையில் பிங்க் நிற சேலையில் இஞ்சி இடுப்பழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க ஏன் சினிமாவில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க கூடாது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது வீடா இல்ல அரண்மனையா! தியேட்டர் வசதியுடன் விஜயகுமார் மகள் கட்டிய சொகுசு பங்களாவின் ஹோம் டூர் வீடியோ இதோ