MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியேற்றம் – பாவப்பட்ட முகத்துடன் கண்ணீரோடு வெளியேறிய ஆர்சிபி!

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியேற்றம் – பாவப்பட்ட முகத்துடன் கண்ணீரோடு வெளியேறிய ஆர்சிபி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்து 3ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எலிமினேட்டருடன் வெளியேறியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 23 2024, 02:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்தது. இதில், எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
210
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதில், டாஸ் வென்று பவுலிங் செய்த அணி தான் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் காரணமாக டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் ஃபாப் டூபிளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

310
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதில் தடுமாறிய ஃபாப் கடைசியில் 17 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பிறகு சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்த விராட் கோலி 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்த நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

410
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

கேமரூன் க்ரீன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரஜத் படிதார் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

510
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மகிபால் லோம்ரார் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஸ்வப்னில் சிங் 9 ரன்களும், கரண் சர்மா 5 ரன்களும் எடுக்கவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

610
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் சேர்த்தனர். காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பை உணர்ந்து ஆடாமல் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். அவர் 17 ரன்கள் ஆட்டமிழந்தார்.

710
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

துருவ் ஜூரெல் 8 ரன்னிலும், ரியான் பராக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக ஆர்சிபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி வாய்ப்பு வந்தது. அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்கள் எடுத்துக் கொடுக்க கடைசியில் ரோவ்மன் பவல் வந்து அதிரடியாக 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

810
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கும் முன்னேறியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ஆர்சிபி இந்த முறை டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

910
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஆனால், 17ஆவது சீசனிலும் டிராபி இல்லை என்ற வேதனையுடன் நடையை கட்டியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. 2022 ஆம் ஆண்டு குவாலிஃபையர் 2ஆவது சுற்றுடன் வெளியேறியது. கடந்த ஆண்டு 6ஆவது இடம் பிடித்த ஆர்சிபி இந்த ஆண்டு பிளே ஆஃப் வந்து எலிமினேட்டர் சுற்றில் விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

1010
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இது ஆர்சிபி வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 5 அரைசதங்கள், ஒரு சதம் உள்பட 741 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார். ஆனால், ஆர்சிபி வெளியேறிய நிலையில் ரியான் பராக் 567 ரன்களும், டிராவிஸ் ஹெட் 533 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். தற்போது ரியான் பராக்கிடம் ஆரஞ்சு கேப் சென்றுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அகமதாபாத்
தினேஷ் கார்த்திக்
RR vs RCB
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சஞ்சு சாம்சன்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved